April 2, 2023

ஏர் இந்தியா-வில் அட்வான்ஸ் புக்கிங் கேன்சலேய்ய்ய்ய்!

கொரோனா கிருமிப் பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் மே 3ஆம் தேதிக்குப் பிறகு இந்திய அரசு என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை. எனினும், பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் நாளை 20 ஆம் தேதிக்குப் பிறகு சில தொழில் நிறுவனங்கள், சேவைகளைத் தொடங்க உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியிருக்கிறது.

மே 3ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து கேள்வி எழுந்து வரும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானச் சேவையை மீண்டும் தொடங்க ஆயத்தமானது.

அதாவது உள்நாட்டில் மே 4 ஆம் தேதியிலிருந்தும் வெளிநாடுகளுக்கு ஜூன் 1 தேதியிலிருந்தும் விமான சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டு, பயண முன்பதிவுகளை சனிக்கிழமை ஏர் இந்தியா தொடங்கியது.

எனினும்  சில மணி நேரங்களிலேயே, அரசு முடிவு செய்த பிறகு பயணிகள் விமான சேவையைத் தொடங்கலாம் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவுரை கூறினார். இந்த நிலையில்,  உள்நாடு, வெளிநாடு விமான சேவைக்கான அனைத்து பயண முன்பதிவை ஏர் இந்தியா நிறுத்திவைத்து விட்டது.