December 4, 2022

கொரானா மற்றும் இதன் முந்தைய வைரஸ்களின் வரலாறு!

இப்போது உலகையே மிரட்டி முடக்கி போட்டிருக்கும் கொரோனா ஒன்றும் புதிது இல்லை. கொரோனா வைரஸ் 1960-ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இவற்றில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என நான்கு முக்கிய உட்பிரிவுகள் உள்ளது. ஆல்பா, பீட்டா வகை கொரோனா வைரஸ் களை வெளவாலும், காமா, டெல்டா வகை கொரோனா வைரஸ்களை பறவைகளும் அவற்றின் உடலில் பெற்றிருக்கும். அவற்றின் உடலில் பெருகி, மாறுதல்கள் பெற்று பிறகு, அவற்றிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. பெயருக்கு என்ன காரணம்? கொரோனா என்பது லத்தீன், கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதற்கு கிரீடம் அல்லது ஒளிவட்டம் என்று பொருள். எலக்ட்ரான் நுண்ணோக்கி வழியாக பார்க்கும்போது இந்த வைரஸ்கள் இந்தத் தோற்றத்தில் தெரிவதால் கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த கொரொனா மாதிரி ஒவ்வொரு நூற்றண்டிருக்கும் ஒரு முறை இதே போல ஒரு தொற்று நோய் உருவாகி அழிவை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.

1348 இல் தொடங்கி 1350 வரை பிளாக் டெத் ஐரோப்பாவில் பரவிய ஒரு தொற்று நோய். இது மனித வரலாற்றியிலே மிகவும் கூடியதாக அமைத்த ஒரு தொற்று நோயாக கருத படுகிறது. இது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்ட பிளாக் என்று பரவலாக நம்ப படுகிறது .

1820 இல் பிளாக் கடலில் உள்ளஇந்த சரக்குகள் ஏற்றிக்கொண்டு பிரான்சின் க்ராண்ட்ஸேயின் அந்தோணி என்கின்ற கப்பல் வந்த பொது மார்சியாவின் பெரும் பிளாக் தொடங்கியது. கப்பல் தனிமை படுத்த பட்டிருந்தாலும் பிளாக் நகரத்துக்குள் நுழைந்தது .பிளாக் நோயால் பாதிக்கப்பட்ட பொருத்தினிகள் மூலமாக பரவி இருக்கலாம், பிளாக் நிறைவாக பரவியது மார்சியா மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நூறாயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் எனவும் கருத படுகிறது

மார்சியாவின் 30% மக்கள் அழிந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 1854 இல் காலரா லண்டனில் ஏற்பட்டது காலராவின் வெடிப்பு 1846 -1860 ஏற்பட்டது 616 பேரை கொன்ற இந்த வெடிப்பு மருத்துவர் ஜான் ஸ்னோவின் காரணம் பற்றிய ஆயிவிற்கும் கிருமிகளால் மாசு பட்ட நீர் காலராராவின் உருவமாக இருக்கிறது என்று அவருடைய கருத்து.

1920 இல் ஸ்பானிஷ் ஃப்ளு. 1918 முதல் 1920 வரை இந்த ஃப்ளு நீடித்தது உலக மக்கள் தொகையில் கால் வாசி மக்கள் இறையானார்கள். இறப்பு எண்ணிக்கை நூறு மில்லியன் இருக்கலாம் என்று கணக்கிட பட்டிருக்கிறது. இது மனித வரலாற்றிலியே மிகவும் மோசமான தொற்றாக கூறப்படுகிறது அதே நாளில் கொரோனவின் எதிரொலியாக சேவைகளை இந்தியா அரசு தாற்காலிகமாக நிறுத்தியது. தற்போது 2020 கொரோனா தொற்று தோன்றி உலகையே ஆட்டிகொண்டு இருக்கிறது. முதல் கொரோனா பாதிப்பு நகரில் டிசம்பர் 8 அன்று கண்டறிய பட்டது. உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனாவின் பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையோ 4 லட்சத்து 68 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக சீனாவில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றாலும் அதற்கு அடுத்தாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனாவின் பாதிப்பால் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நெதர்லாந்தில் ஒரே நாளில் 80 பேரும், பெல்ஜியத்தில் 56 பேரும் உயிரிழந்துள்ளனர். இதோடு நெதர்லாந்தில் இதுவரை 356 பேரும், பெல்ஜியத்தில் 178 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் இங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 43 உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு இதுவரை 465 பேர் பலியாகி உள்ளனர். மேலும் அங்கு புதிதாக ஆயிரத்து 450 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. லிபியாவில் முதல் நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எமிட் பின் ஒமர் அதிகாரபூர்வமாக தெவித்துள்ளார்.

இந்த வைரஸ் பற்றி முழுமையாக புரிந்து கொண்ட பின்னரே உரிய நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வந்தவரை மட்டுமல்லாது, வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து வழி பயணிகளிடமும் முழுமையான பயண வரலாற்றை அனைவரிடமுமே கேட்டறிந்து சோதனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதை தேசிய, மாநிலம், மாவட்டம், ஊரகத்துறை மட்டங்கள் வரையிலும், மக்களுடன் இணைந்து தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவின் செயல்பாட்டை கொண்டு சென்றால் மட்டுமே பணியை முழுமையாக செய்ய முடியும். சென்னையில் 25 சதவீத மக்களிடம் மட்டுமே கொரோனா வைரஸ் திரையிடல் சோதனை(Screening test) செய்திருக்கிறார்கள். ஆட்கள் பற்றாக்குறையை காரணமாக சொல்கிறார்கள். முக்கிய மூன்று அறிகுறிகளான தொண்டை வலி, காய்ச்சல், மூச்சுத் திணறல்களை மட்டுமே பார்க்கிறார்கள்.

2 வாரங்கள் முதல் 3 வாரங்கள் வரை மட்டுமே தனிமைப்படுத்துகிறார்கள். ஆனால், உலகளவில் 1 மாதத்திற்குப் பிறகும் தெரிவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும், சில வேளைகளில் ஆரம்பத்தில் நெகடிவ் முடிவாக இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு பாசிடிவ் முடிவு வருகிறது. Infrared gun-ஐ நெற்றியில் வைத்து காய்ச்சலை அளவிடுகிறார்கள். சில நேரங்களில் இதில் துல்லியமான டெம்பரேச்சரை காண்பிப்பதில்லை. அதனால் காய்ச்சலை மட்டுமே அளவுகோலாக எடுத்துக் கொண்டு அந்த நோயாளிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது. வெப்பத்தை அளக்கும் கருவியின் முனைக்கும், நெற்றித் தோலுக்கும் 3 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். இல்லையேல் முடிவுகள் மாறி வரும். ஆக அதை கண்காணிக்க தமிழக அரசு குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும். சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலும் கூட, தொற்று இருக்க வாய்ப்பிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்து, நெகடிவ் முடிவு காண்பித்தாலும், CT Lung ஸ்கிரீனிங்கை அளவுகோலாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. GGA(Ground Grass Appearance) நுரையீரலின் அடிப்பகுதியில் மற்றும் வெளிப் பகுதியில்(Periphery) வைரஸ் தொற்று இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே CT Lung ஸ்கிரீனிங்கையும் கட்டாயமாக செய்ய வேண்டும். அடுத்ததாக ஒரு இடத்தில் மட்டும் மாதிரியை எடுக்காமல்(உதாரணமாக ரத்த மாதிரி, மூக்கு, தொண்டை, மலவாய், மூச்சுக்குழல் (Bronchus) போன்ற பல இடங்களிலும் மாதிரிகள் எடுத்து சோதனைக்குட்படுத்துவதை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. காரணம் இறுதிக்கட்டத்தில் வாயிலிருந்து எடுக்கும் மாதிரி நெகடிவ் காண்பித்தாலும், மலவாய் பகுதியில் எடுக்கும் மாதிரி பாசிடிவ் முடிவு தெரிவிக்கிறது.

எனவே எல்லா இடங்களிலும் மாதிரிகள் எடுத்து(குறிப்பாக மலவாய்) சோதனை செய்தும், மூலக்கூறு ஆய்வுகளையும் 2 முறை செய்த பின்னர்தான் நோயாளியை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். ஏனெனில், மூலக்கூறு ஆய்வுகள் 50 சதவீதம் வரை நோய்த்தாக்கம் இருந்தும் சரியாக காண்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. தென் கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் Re-Positivity இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது முதலில் பாசிடிவ்வாகவும், அடுத்து நெகடிவ் காண்பித்து, மீண்டும் பாசிடிவ் முடிவை காண்பிக்கிறது. எனவே 2, 3 முறை துல்லியமாக மாதிரிகள் எடுத்து ஆய்வு மேற்கொள்வது மிக மிக முக்கியம்.