December 2, 2021

கொரொனா வர விடாமல் செய்யும் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுப் பட்டியல்!

உலகம் தொடங்கி நம்ம ஜனங்கள் அத்தனை பேரையும் முடக்கி போட்டுள்ள கொரோனா என்ற கொடிய நோய்-க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுப் பிடிக்கவில்லை, அதே சமயம் நோயாளிகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக அவர்களுக்கென சுகாதாரத்துறை சார்பில் பிரத்யேகமாக உணவுகள் தயாரிக்கப் படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வகையில் சத்தான உணவுகள் கொடுக்கப்படுகிறது என்றெல்லாம் தகவல்கள் வரும் நிலையில் நம் அன்றாடம் சாப்பிடும் உணவு மூலமாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா வைரசை தடுக்க இயலுமா? என்று நம் வாசகர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.அந்த வகையில் வீட்டிலேயே கொரோனா எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் உணவு விபரம் இதோ:

துாதுவளை, மல்லி, புதினா சேர்ந்த துவையல் செய்து, நெய் சேர்த்து, இரண்டு பிடி சாதத்துடன் சாப்பிடுவது மிக மிக நல்லது.

மாலை, 6:00 மணிக்கு, கற்பூர வல்லி இலைகள் ஐந்தை சுத்தம் செய்து, கடலை மாவு கரைசலில், பஜ்ஜி போல் செய்து, இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம்.

அத்துடன் இஞ்சி, 1 துண்டு எடுத்து மேல் தோலை சீவி நசுக்கி, ஒரு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி பருக வேண்டும்.

இரவு, 8:00 மணிக்கு பப்பாளி, ஆப்பிள், திராட்சை, கொய்யா போன்ற பழங்களை துண்டுகளாக்கி, ஒரு கப் சாப்பிட வேண்டும்.

இரவு, 9:00 மணிக்கு, இரண்டு சப்பாத்தி, உப்புமா, சாம்பார் சாதம் அல்லது வெஜிடபிள் சாதம் ஆகியவற்றில், ஏதாவது ஒன்று சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கும் முன், பாலில், இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி, மூன்று பூண்டு பற்கள் நசுக்கிப் போட்டு, காய்ச்சி பருக வேண்டும். மஞ்சளில் உள்ள, ‘குர்குமின்’ எனும் வேதிப்பொருள், மிகச் சிறந்த கிருமி நாசினி மட்டுமின்றி, நுரையீரல் கவசமாகவும் விளங்குகிறது.

மேலும்

1. சிட்ரஸ் பழங்கள்

பொதுவான தொற்று மற்றும் நோய்களிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாப்பது, வெள்ளை ரத்த அணுக்கள், ஆனால், உடல் தானாக அவற்றை உற்பத்தி செய்துகொள்ள முடியாது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க, வைட்டமின் சி உதவுகிறது. அதனால், வைட்டமின் சி நிறைந்த பழங்களான ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்றவற்றைத் தினமும் உட்கொள்ளலாம்.

2. ப்ரோக்கோலி

பச்சை நிற காய்கறிகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில், ஆண்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ப்ரோக்கோலி ஒரு சிறந்த உணவாக உள்ளது.

3. பூண்டு

உடலுக்குப் பல நன்மைகளைச் செய்யக் கூடையது பூண்டு. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் ரத்தக் குழாய் கடினமாவதைத் தடுக்கவும் உதவுகிறது. ஆரம்பக் காலத்தில் பூண்டு பாக்டீரியா மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.

4. இஞ்சி

இஞ்சியில் இருக்கும் இஞ்சிரோல் என்னும் அம்சம், இருமல், தொண்டைப் புண் மற்றும் பிற அழற்சி நோய்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொழுப்பு அளவைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் இஞ்சி உதவுகிறது.

5. மஞ்சள்

பல ஆண்டுகளாக, வீக்கம் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு மஞ்சளைத் தீர்வு முறையாக பயன்படுத்தினோம். அதிக அளவிலான குர்குமின் கலவை மஞ்சளில் இருப்பதால், முந்தைய காலங்களில் அவற்றை ஆன்டிஆக்ஸிடண்ட்டாக பயன்படுத்தப்பட்டது. இதயம் தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய் மற்றும் அல்டைமர் போன்ற நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.

இவைகளுடன் மேலே குறிப்பிட்ட அமுத உணவு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா வைரஸ் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். எல்லாரும் பயன்படுத்துங்கள்; கொரோனாவை நம் பாரம்பரியம்படி வெல்லுங்கள்!