கொரோனா மீண்டும் பரவுது.. இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயண தடை! சவுதி அறிவிப்பு!.

கொரோனா மீண்டும் பரவுது.. இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயண தடை! சவுதி அறிவிப்பு!.

ரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் குறையாத கொரோனா பாதிப்பு தற்போது மேலும் அதிகரிப்பதால் 16 நாடுகளுக்கு சவுதி அரேபியா பயணத் தடை விதித்துள்ளது. சவுதி மக்கள் இந்தியா, பெலாரஸ், ஆப்கன், இந்தோனேசியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு, சவுதி அரேபிய அரசு இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய தனது குடிமக்களுக்கு தடை விதித்து உள்ளது.

இதன்படி, இந்தியா உள்பட லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய 16 நாடுகளுக்கு தங்களது குடிமக்கள் செல்ல தடை விதித்து உள்ளது. சவுதி அரேபியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் இல்லை என்றும் சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தி உள்ளது.

error: Content is protected !!