June 21, 2021

எண்ணெயிலே எந்த எண்ணை நல்லது தெரியுமா?

சமீப காலமாச் சந்தையிலே எக்கச்சக்கமான புதுசு புதுசா சமையல் எண்ணைங்க வர ஆரம்பிச்சிட்டுது. அதுலே பெரும்பாலான எண்ணைகளில் இதயதிற்குப் பாதுகாப்பானது என்ற வாசகம் இடம்பெறத் தவறுததில்லை. இப்பல்லாம் இதயத்திற்கு பாதுகாப்பான சமையல் எண்ணை என்று சூரியகாந்தி எண்ணைக்கு ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்றைக்குப் பெரும்பாலான நடுத்தர வீடுகளில் சூரியகாந்தி எண்ணைதான் உபயோகப்படுத்துகிறார்கள்.

pi; danger

இத்தனைக்கும் கொழுப்புகளில் இரண்டு வகை உண்டு, திடக்கொழுப்பு மற்றும் திரவக் கொழுப்பு. திடக்கொழுப்பு என்பது கெட்டியாக இருக்கும் உருக்கினால்தான் திரவமாகும். உதாரணம், வெண்ணை, மிருகக் கொழுப்புகள். திரவக்கொழுப்பு சதாரணமாக திரவமாக்வே இருக்கும், உறைய வைத்தால் மட்டுமே கெட்டியாகும். உதாரணம், தேங்காய் எண்ணை, நல்லெண்ணை.

பொதுவாகப் பார்க்கும்போது திரவக்கொழுப்பே நமக்குப் பாதுகாப்பானது. திரவக்கொழுப்புகள் புஃபா (PUFA என்று விளம்பரங்களில் பார்திருப்பீர்கள்) எனப்படும் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. விளம்பரங்களில் மேலோட்டமாக PUFA உள்ளது என்று சொல்லிவிடுகிறார்கள்,

ஆனால் கனடா நாட்டுக்காரன் கடலை எண்ணையை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை வறுத்து திண்பதோடு இயற்கையிலேயே கொலஸ்ட்ரால் இந்த எண்ணையில இல்லேன்னு விளம்பரப்படுத்தறான். History tv ல கடலை எண்ணைய்ல எதை எல்லாம் வறுத்து திண்ண முடியும்னு கிளாஸ் எடுத்துகிட்டு இருக்கான்..

ஆனா நமக்கு மட்டும் வெளிநாட்டுக் காரன் கடலை எண்ணைய்ல கொலஸ்ட்ரால் அதிகம்னு விளம்பரங் கள் செஞ்சு மூலை சலவை செஞ்சு க்ரூட் ஆயிலை சூரியகாந்தி எண்ணைய்ன்னு தள்ளி விட்டுட்டான். நாட்ல பெரும்பாலான மக்கள் இந்த எண்ணையை கடந்த 25 வருஷமா பயன்படுத்தினதுல பல்வேறு நோய்களுக்கு ஆளாயிட்டாங்க.. அமெரிக்காகாரன் என்னடான்னா peanut பர்ப்பியையும் சாக்லட்ல வறுத்த வேர்க்கடலையையும் போட்டு பெரிய அளவுல வியாபாரம் பண்றதில்லாம நம்மநாட்லேந்து வேர்க்கடலையை அவங்களுக்கு தேவையான அளவுக்கு இறக்குமதி பண்ணிக்கிறான்..

வேர்க்கடலை எண்ணைய் கொலஸ்ட்ரால்ன்னு திட்டமிட்டு பொய்யான வதந்தியை பரப்பிவிட்டு இந்திய மக்களை நோய்களுக்கு ஆளாக்கிட்டு இன்றைக்கு அவங்க நாட்ல தயாரிக்கிற மருந்துகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை இங்கே சம்பாதிச்சுகிட்டு இருக்கான்.. இதுல நம்ம நாட்ல இருக்கிற கார்ப்பரேட் மருத்துவமனைகளும் சேர்ந்து சதி பண்ணிகிட்டு வர்றாங்க..

ஆக இப்படி எல்லாத்திலேயும் நாம ஏமாந்து போய் நோய்களோட போராடிகிட்டு இருக்கோம். இனியாச்சும் சமையல் எண்ணைய் விஷயத்தில் விழிப்புணர்வோட இருப்போம்.. சுத்தமான செக்கில் ஆட்டிய கடலை எண்ணைய் நல் எண்ணையை பயன்படுத்த முயற்சிப்போம்..

உதயகுமார்