இந்திய அரசியலமைப்பின் 70வது ஆண்டு தின விழாவில் ஜனாதிபதி & மோடி பேசிய விபரம்!
”நாட்டின் 3 பிரதான உறுப்புகளான அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள், அரசு துறைகளின் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் என அனைவரும் அரசியலமைப்புக்கு கட்டுப்படவேண்டும்” என்று இந்திய அரசியலமைப்பின் 70வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, பாராளுமன்றத்தில் உரை யாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டுக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. மகாராஷ்டிராவில் நடந்துவரும் அரசியல் குழப்பம், அதில் மத்திய அரசின் தலையீடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டத்தை இக்கட்சிகள் புறக்கணித்தன.
பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ”இந்திய அரசியலமைப்பின் 70வது ஆண்டு தினத்தை முன்னிட்டை, அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்கள் மற்றும் அண்டை நாடுகளில் உள்ள இந்திய மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
Watch LIVE as President Kovind addresses the Constitution Day Celebrations at the Supreme Court of India https://t.co/M3rDiMxHdv
— President of India (@rashtrapatibhvn) November 26, 2019
அரசியலைப்பின் முக்கியத்துவம் குறித்து பேசிய குடியரசு தலைவர், “அரசியலமைப்பை உச்சகட்டமாக எடுத்துக்கொண்டு, அரசியலமைப்பு ரீதியிலான கட்டாய நடைமுறைகளுக்கு நாம் கட்டுப்படவேண்டும் என்று அம்பேக்தர் கூறியிருந்தார். அதன்படி, நாட்டின் 3 பிரதான உறுப்புகளான அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள், அரசு துறைகளின் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் என அனைவரும் அரசியலமைப்புக்கு கட்டுப்படவேண்டும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளத்தில் இந்திய அரசியலமைப்பு அமைந்துள்ளது. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பின், உச்சகட்ட சட்டமான இந்திய அரசியலமைப்பு நம்மை தொடர்ந்து வழிநடத்தும்” என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
பின்னர் பேசிய குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு, “70 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்திய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. இந்தியாவின் மிகச்சிறந்த மனம் மற்றும் உணர்த்திறன் கொண்ட இதயங்களால் நமது அரசியலமைப்பு ஆவணம் உருவாக்கப்பட்டது. இத்தகைய அரசியலமைப்பை நம் நாட்டிற்காக உருவாக்கிக் கொடுத்தவர்களில் ஒருவரான அம்பேத்கருக்கு என் மரியாதையை நான் செலுத்துகிறேன். நாட்டு குடிமக்களுக்கு தங்கள் அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை பரப்பரவேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எம்பிக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டுக் குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது, ”இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஏராளமான உரிமைகளை வழங்கியுள்ளது. அதேசமயம், நாம் செய்ய வேண்டிய கடமை களையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்ட பின், கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான மக்கள் சமத்துவத்தையும், நீதியையும் இழந்து வந்ததால் நாம் உரிமைகளை வலியுறுத்தி வந்தோம்.
ஆனால், இப்போதுள்ள நேரத்துக்குத் தேவையானது என்னெவன்றால் இந்த சமூகம் தங்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படுவதாகும். நம்முடைய கடமைகளை நிறைவேற்றாமல் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது.
Speaking in Parliament on #ConstitutionDay. Watch https://t.co/snTemTIFze
— Narendra Modi (@narendramodi) November 26, 2019
நாம் இந்த தேசத்து மக்கள் என்ற வார்த்தையுடன்தான் அரசியலமைப்புச் சட்டம் தொடங்குகிறது. அதன் வலிமை, நோக்கம், ஊக்கம் ஆகியவற்றை உணர வேண்டும். நம்முடைய சந்திப்புகள், உரையாடல்களில் நமக்கிருக்கும் கடமைகளில் கவனம் செலுத்த முயல வேண்டும்.
இந்த தேசத்தின் தந்தையான மகாத்மா காந்தி, உரிமைகளையும், கடமைகளையும் புரிந்துகொண்டு அதற்கு உரிய சமநிலையை வெளிப்படுத்தினார். இந்த நாட்டின் குடிமகனாகப் பெருமைப்பட வேண்டுமென்றால், நம்முடைய செயல்கள் எவ்வாறு தேசத்தை வலிமையாக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தில். இந்தியருக்கான கண்ணியம், இந்தியாவுக்கான ஒற்றுமை என இரு முக்கிய மந்திரங்கள் உள்ளன. நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் என்பது புனிதமான நூல். இதில் நமது பாரம்பரியங்கள், நம்பிக்கைகள், சவால்களுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய அரசியலமைப்பைக் கட்டி எழுப்பிய முக்கிய சிற்பியான அம்பேத்கர், நாடு கற்பனை செய்து உள்ள சுதந்திரம், ஜனநாயகத்தை நிலை நிறுத்தி வைத்திருக்க முடியுமா என்று மக்களிடம் கேட்டார். ஆனால் அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால், அவர்தான் மிகவும் மகிழ்ச்சியான மனிதராக இருந்திருப்பார். இந்த தேசம் தனது நல்லொழுக்கங்களை மட்டுமல்லாது, ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் கடைப்பிடித்து வலிமைப்படுத்தியுள்ளது.
நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்புச் சட்ட நாள் என்பதால் நாம் கொண்டாட வேண்டிய நாள். ஆனால், மும்பை தீவிரவாதத் தாக்குதல் இதே நாளில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்ததால், அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நான் நினைவஞ்சலி செலுத்துகிறேன்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ராஜேந்தி்ர பிரசாத், அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், பண்டிட் நேரு, ஆச்சார்யா கிர்பாலினி, மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் பங்களிப்பை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். அவர்கள் மக்களுக்கு அளித்துள்ள பெருமைகளையும் நினைவில் கொள்கிறேன்”. என்று பிரதமர் மோடி பேசினார்.