March 31, 2023

பார்டர் செக்யூரிட்டி போர்ஸ்- ஸில் கான்ஸ்டபிள் ஜாப் தயார்!

பாகிஸ்தான் எல்லையோர ஊடுருவல்களைத் தடுக்கும் பொருட்டும், நமது பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கத்திலும் நிறுவப்பட்டதுதான் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் எல்லைக் காவல் படை. தற்போது இந்த காவல் படையின் சேவைகள் பெரிதும் உணரப்பட்டு உள்ளதோடு, சேவைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் காவல் படையில் கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பிரிவில் காலியாக இருக்கும் 1,763 இடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: ஆண்களுக்கான காலியிடங்களாக காப்ளரில் 32, டெய்லரிங் 36, கார்பென்டரில் 13, குக் பிரிவில் 561, டபிள்யூ.சி.,யில் 320, டபிள்யூ.எம்.,மில் 253, பார்பரில் 146, ஸ்வீப்பரில் 389, வெயிட்டரிங் 9, பெயின்டரில் 1, டிராப்ட்ஸ்மேனில் 1ம் உள்ளன. மகளிருக்கான பதவிகளாக டெய்லரிங் 2 இடங்கள் உள்ளன.

வயது: 01.08.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயது உடையவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் ஒரு வருட ஐ.டி.ஐ., படிப்பை தொடர்புடைய டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும். இரண்டு வருட பணியனுபவம் தேவைப்படும்.

உடல் தகுதி: ஆண்கள் குறைந்த பட்சம் 162.5 செ.மி.,யும், மகளிர் 150 செ.மி.,யும் உயரம் இருப்பதுடன் உயரத்திற்கு நிகரான எடையும் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பி.எஸ்.எப்.,பின் உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

கடைசி நாள்:
 2019 பிப்., 26.

விபரங்களுக்கு
: ஆந்தை வேலைவாய்ப்பு