இயேசுவுடன் திருமணம் – 41 வயது அமெரிக்க பெண் அர்பணிப்பு!!

இயேசுவுடன் திருமணம் – 41 வயது அமெரிக்க பெண் அர்பணிப்பு!!

புதுப் புது ட்ரெண்டிங் நியூஸ்களை உருவாக்கும் அமெரிக்காவில் ஜெஸிக்கா ஹெய்ஸ், எனும் பெண்மணி தமக்கு தாமே திருமண உடையையும் மோதிரத்தையும் வாங்கிக் கொண்டு, திருமணத் திற்காக தேவாலயத்தில் பாதிரியார் முன்பு நின்றுள்ளது ட்ரெண்டாகி உள்ளது. அவர் அருகில் மணமகன் என்று யாரும் இல்லை. அதாவது அவர் அவர் இயேசுவுடன் திருமணம் செய்து கொண்டாராம். ஆம்.. 41 வயதான ஹெய்ஸ், கடவுளின் மனைவியாக இருக்க விருப்பப்பட்டு, கன்னிப் பெண்ணாக தேவனுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.

வழக்கமாக இதனை தேர்வு செய்பவர்கள், இந்த அர்ப்பணிப்பு நடைமுறையில், மணப்பெண் போல உடை அணிந்து, தங்களது வாழ்க்கையில் பாலியல் ரீதியாக எந்த உறவிலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். அந்தப் பெண்கள் கைவிரலில் மோதிரமும் அணிந்து கொள்வார்கள் – இயேசு கிறிஸ்துவுடன் நிச்சயம் ஆனதை இது குறிக்கும்.

100 பெண்கள் தொடரில் இடம் பெற்றிருக்கும் ஹெய்ஸ் இதுப் பற்றி கூறுகையில், “என்னிடம் அடிக் கடி கேட்பார்கள். உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? என்று. நான் ஒரு கன்னியாஸ்திரி போல என்று எளிமையாக பதில் அளித்து விடுவேன். ஆனால் நான் தேவாலயத்திற்கு வெளியேவும் வாழ்கிறேன்” என்கிறார்.

அதாவது அமெரிக்காவின் கடவுளுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பான “இயேசுவின் மனப்பெண்கள்” (brides of Christ) அமைப்பில் இருக்கும் 254 பேரில் இவரும் ஒருவர். இவர்கள் எல்லாம் செவிலியர்கள், மனநல ஆலோசகர்கள், கணக்காளர்கள் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.

2015 கணெக்கடுப்புப்படி, இவ்வாறு இயேசுவிற்கு அர்ப்பணித்துக் கொண்ட கன்னிப்பெண்கள் உலகம் முழுவதும் குறைந்தது 4,000 பேர் உள்ளனர். பரந்துப் பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பல்வேறு கலாசார கங்ளில் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவதாக வத்திக்கான் கூறுகிறது.

அதே சமயம்  கன்னியாஸ்திரிகள் போல, இந்த கன்னிப்பெண்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத் திற்குள் வாழ்வதோ அல்லது அதற்கான சிறப்பு ஆடைகள் அணிவதோ இல்லை. அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். வேலை பார்க்கிறார்கள். இப்படி கத்தோலிக்க திருச்சபையில், இதற்கு சமமான ஆண்கள் என்று யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!