October 16, 2021

சோனியா & ராகுல் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சோனியா காந்தி மற்றும் ராகுல் போட்டியிடும் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. உ.பி.யில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி வைத்த நிலையில் காங்கிரஸ் தனியாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நிலை காரணமாக இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியது. இதற்கிடையே பிரியங்கா காந்தியும் அரசியலுக்கு வந்தார். எனவே பிரியங்கா போட்டியிடலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில் தேர்தலில் முதலாவதாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆம்.. இன்னும் ஓரிரு நாளில் தேர்தல் கமிஷனால அறிவிக்கப்பட்டு இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்னும் ஒருசில கட்சிகள் கூட்டணியையே இறுதி செய்யவில்லை. ஆனால் கூட்டணி விஷயத்திலும் வேட்பாளர் தேர்வு விஷயத்திலும் படுவேகமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, சற்றுமுன் தனது முதல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முதல் பட்டியலில்; உத்தரபிரதேசத்தில் 11 தொகுதிக்கான வேட்பாளர்களும், குஜராத்தில் 4 தொகுதிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பட்டியலில் ரபேலி தொகுதியில் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் ராகுல்காந்தியும் போட்டியிட வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபரூகாபாத் தொகுதியில் சல்மான் குர்ஷித், உன்னவ் தொகுதியில் அன்னு டண்டன், அக்பர்பூர் தொகுதியில் ராஜாராம் பால், சோட்டா உதய்பூர் தொகுதியில் ரஞ்சித் மோகன்சிங் ஆகியோர்களும் போட்டியிடவுள்ளனர்.