April 12, 2021

மல்லிகார்ஜூன கார்கே ராஜ்யசபாவில் 17 வது எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே ராஜ்யசபாவில் 17 வது எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: எதிர்கட்சியான காங்கிரசின் சார்பில் ராஜ்யசபாவில் காங்., தலைவராக இருந்து வந்த குலாம்நபிஆசாத் பதவிக்காலம் வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்க உள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவரான சோனியா ராஜ்யசபா துணைதலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் மல்லிகார்ஜூன கார்கேவை ராஜ்யசபா எதிர்கட்சி தலைவராக நியமிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

ராஜ்யசபாவில் இதுவரையில் மொத்தம் 16 பேர் எதிர்கட்சி தலைவராக இருந்துள்ளனர். ஷியாம் நந்தன் மிஸ்ரா (1969- 71), குருபாதசுவாமி(71—- 72 மற்றும் 1991), கமலாபதிதிரிபாதி (77 78,78 80 2 முறை), போலா பஸ்வான் சாஸ்திரி(1978), எல்.கே.அத்வானி (1980), ஷிவ்சங்கர்(1989 91), ஜெய்பால் ரெட்டி(1991 92), சிக்கந்தர் பகத் (1992 96,96 98 வரையில் 2 முறை), எஸ்.பி.,சவான்(1996) , மன்மோகன்சிங் (1998 2001,மற்றும் 2004), ஜஸ்வந்த்சிங்(2004 09), அருண் ஜெட்லி(2009 -2012), குலாம் நபி ஆசாத்(2014 முதல் 2021).இவர்களில் கமலாபதிதிரிபாதி எம்.எஸ் குருபாதசுவாமி சிக்கந்தர் பகத் ஆகியோர் தலா இரண்டு முறை ராஜ்யசபா எதிர்கட்சி தலைவராக இருந்துள்ளனர்.

மேலும் நீண்ட காலம் எதிர்கட்சி தலைவராக இருந்தவர்களின் வரிசையில் குலாம்நபி ஆசாத் முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் 6 ஆண்டுகள் 9 மாதங்கள் வரையில் பதவியில் இருந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சிக்கந்தர் பகத்( 5 ஆண்டுகள் 10 மாதங்கள்), மன்மோகன்சிங்( 5 ஆண்டுகள் 9 மாதங்கள்) அருண்ஜெட்லி ( 5 ஆண்டுகள் 2 மாதங்கள்) ஜஸ்வந்த்சிங்( 5 ஆண்டுகள்)

தற்போது 17 வது எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ள மல்லிகார்ஜூன கார்கே கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 2014 முதல் 2019ம் ஆண்டு வரையில் லோக்சபா காங்கிரஸ்கட்சி தலைவராக இருந்துள்ளார்.