பிரியங்கா காந்தி ஆக்ராவில் கைதாகி விடுதலை!

பிரியங்கா காந்தி ஆக்ராவில் கைதாகி விடுதலை!

போலீஸ் காவலில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்தை சந்திக்க பிரியங்கா ஆக்ரா சென்றுள்ளார். ஆக்ரா சென்றபோது கான்வாய் வாகனங்களை தடுத்து நிறுத்தி பிரியங்கா காந்தியை உத்திரபிரதேச காவல்துறையினர் கைதுசெய்தனர். ஆனால், தான் நாட்டில் எங்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு முழு உரிமையும் உள்ளது என்ற அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிகாட்டியபின் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

அதாவது போலீஸ் காவலில் இறந்த ஒருவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக லக்னோ ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக ஆக்ராவுக்கு பிரியங்கா காந்தி சென்றுகொண்டிருந்தபோது போலிஸார் அவரை தடுத்து நிறுத்தினார்கள் ஆக்ராவுக்கு பிரியங்கா செல்லக்கூடாது என்று போலீசார் தெரிவித்தனர் போலீஸ் காவலில் இறந்தவர் குடும்பத்தினரை அரசியல் தலைவர்கள் யாரும் சந்திக்க விடாமல் பார்த்துக் கொள்ளும்படி போலீசாரிடம் மாஜிஸ்ட்ரேட் தெரிவித்து இருக்கிறார். அதனால் பிரியங்கா காந்தி செல்லக்கூடாது என்று போலீசார் தெரிவித்தனர். அதே சமயம் பிரியங்கா தன்னுடைய வீட்டுக்கு செல்லலாம் .அல்லது காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு செல்லலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்

அதற்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி கட்சி அலுவலகத்துக்கு செல்லவில்லை என்றும் தன்னுடைய வீட்டுக்கும் போக விரும்பவில்லை என்றும் கூறினார்.ஆக்ராவுக்கு சென்று போலீஸ் காவலில் இறந்தவர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நான் அங்கே செல்கிறேன் ஆக்ரா செல்லாமல் நான் திரும்பமாட்டேன் என்று பிரியங்கா காந்தி கூறினார்.அதனால் போலீசார் 2 மணி நேரம் சாலையிலேயே பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்திவிட்டார்கள். அதன் பிறகு போலீஸ் ரிசர்வ் லைனுக்கு பிரியங்கா காந்தியை அழைத்துச் சென்றார்கள்.

ஆனால் பிரியங்கா காந்தியின் காவலில் வைக்கவில்லை. அவரைக் கைது செய்யவுமில்லை. சாலையில் பெருமளவில் கூட்டம் சேர்ந்து விடுகிறது அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து இயல்பாக அமைவதை உறுதி செய்வதற்காக அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இருக்கிறோம் என்று லக்னோ போலீஸ் ஆணையர் டி.கே.தாக்குர் தெரிவித்தார்.

அதே சமயம் பிரியங்கா காந்தியை உத்தரப் பிரதேச மாநில போலீசார் கைது செய்து காவலில் வைத்து இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆக்ரா செல்லும் வழியில் பிரியங்கா காந்தியை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்திருந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் யாரும் விளையாட அனுமதிக்க மாட்டோம். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது போலீசாரின் முதல் முக்கியக் கடமையாகும் என்று யோகி தெரிவித்தார்.

இரண்டு மணி நேரம் சாலையில் நிற்க வைத்து பின்னர் பிரியங்கா காந்தியை கைது செய்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. லக்கிம்பூர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பிரியங்கா காந்தி சென்றபொழுது இப்படித்தான் பிரியங்கா காந்தியை 48 மணி நேரம் காவலில் வைத்து அதன் பிறகு எந்த வழக்கும் இல்லாமல் விடுதலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!