அமெரிக்க ஓபன் டென்னிஸ் : 18 வயதேயான இளம் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு, சாம்பியன்!
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 150ஆம் நிலையில் உள்ள இங்கிலாந்தின் இளம் வீராங்கனை எம்மா ரடுகானுவும், 73ஆவது இடத்தில் உள்ள கனடாவின் லேலா ஃபெர்னாண்டசும் மோதினர். முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்காக இரண்டு இளம் வீராங்கனைகள் களம் கண்டதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய ரடுகானு, தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார். இந்த போட்டியில் கனடாவின் ஃபெர்னான்டஸ் செய்த தவறுகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட எம்மா ரடுகானு, 6-3 என இரண்டாவது செட்டையையும் கைப்பற்றி, நேர்செட் கணக்கில் அமெரிக்க ஓபன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவரது வெற்றியை தொடர்ந்து பிரிட்டன் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பதின்பருவத்தில் யு.எஸ்.ஓபனில் தகுதி பெற்ற செரீனா வில்லியம்ஸ் கடந்த 1999ம்ஆண்டு மார்டினா ஹிங்கிஸை தோற்கடித்தார். அதன்பின் பதின்பருவத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் இறுதிப்போட்டிவரை சென்று, பட்டம் வென்றது இதுதான் முதல்முறையாகும்.
எம்மா ராடுகானு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற 10போட்டிகளைச் சந்தித்து வென்றுள்ளார். இதில் 3 ஆட்டங்கள் தகுதிச்சுற்று மூலமும், மற்ற 7 ஆட்டங்கள் பிரதானச்சுற்றிலும் வந்துள்ளன. இதில் எந்த ஆட்டத்திலும் எம்மா ராடுகானு ஒரு செட்டையும் இழக்காமல் வெற்றி கண்டுள்ளார்.
🦉அமெரிக்க ஓபன் டென்னிஸில் வரலாற்றை உருவாக்கி சாம்பியன் பட்டம் வென்றார் 18 வயதே ஆன எம்மா ரடுசானு
அமெரிக்கா ஓபன் டென்னிசை 53 ஆண்டுகளுக்கு பின் பெற்ற முதல் பிரிட்டிஷ் பெண்ணாக்கும் இந்த எம்மா ரடுசானு
US Open: Britain’s 18-year-old Emma Raducanu d claim her first Grand Slam crown pic.twitter.com/fBfuibQAMk
— Àanthai Répørter™ 👀🦉 (@aanthaireporter) September 12, 2021
அமெரிக்க ஓபன் கோப்பையை வென்ற ரடுகானுவை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் பாராட்டியுள்ளார். இவ்வளவு சிறிய வயதில் குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளீர்கள், இது உங்களின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றி என ராணி எலிசபெத் பாராட்டியிருக்கிறார்.