இந்திய அணி இப்ப எல்லாத்துலேயும் நம்பர் 1 -ங்கோ!

இந்திய அணி இப்ப எல்லாத்துலேயும் நம்பர் 1 -ங்கோ!

ஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஆம்.. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனையாக பதிவாகி உள்ளது.பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்திய நிலையில் இந்த சாதனை அரங்கேறி உள்ளது.

அதாவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து ஃபார்மெட்டிலும் முதலிடம் பிடித்துள்ளது. முதல் முறையாக இந்திய அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2014-ல் தென் ஆப்பிரிக்க அணி மட்டும் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மெட்டிலும் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தது.

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது ரோகித் சர்மா தலைமையிலான அணி. இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரியில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அந்த அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் முதலிடம் பிடித்தது. இது இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி வீரர்களுக்கு நிச்சயம் ஊக்கம் கொடுக்கும். டி20 கிரிக்கெட்டில் 2022 முதல் இந்திய அணி முதல் இடத்தில் இருந்து வருகிறது.

115 புள்ளிகளுடன் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 111 புள்ளிகள், இங்கிலாந்து 106 புள்ளிகள், நியூஸிலாந்து 100 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

error: Content is protected !!