ஆதார் கார்டு குறித்து மத்திய அரசின் குழப்படி அறிவிப்புகள்!

ஆதார் கார்டு குறித்து மத்திய அரசின் குழப்படி அறிவிப்புகள்!

தார் கார்டு விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதால், அதன் நகலை யாரிடமும் பகிர வேண்டாம் என விடப்பட்ட சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது. ஆதார் அட்டையை எப்போதும் போல் பயன்படுத்தலாம் என விளக்கமளித்துள்ளது. ஆதார் எண்ணை பயன்படுத்துவதிலும், பகிர்ந்து கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

முன்னதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆதார் அட்டை நகலை யாரிடமும் வழங்க வேண்டாம். ஆதார் நகலை பெறும் நிறுவனங்கள் அதை தவறாக பயன்படுத்தக்கூடும். மாஸ்க்ட் ஆதார்( மறைக்கப்பட்ட ஆதார்) எனப்படும் கடைசி 4 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டையினை பயன்படுத்தவும். இதனை யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். பிரவுசிங் சென்டர்கள், பொது கணினியில் மின்னணு ஆதாரை பதிவிறக்கம் செய்யவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் ஆதார் விவரங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை அங்கிருந்து அழித்துவிட வேண்டும் எனக்கூறியிருந்தது.

இந்நிலையில், ஆதார் அட்டை நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்திரிகை செய்தியை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதை கருத்தில் கொண்டு, முன்னர் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!