இன்று அர்னாப், நாளை நீங்கள்? – விநாசகாலே விபரீத புத்தி!

இன்று அர்னாப், நாளை நீங்கள்? –  விநாசகாலே விபரீத புத்தி!

அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ததின் மூலம் ஜனநாயகத்தின் நான்காம் தூணின் குரல்வளையை நெரித்துள்ளது மகாராஷ்ட்ரா போலீசும் மற்றும் அனைத்து ஊழல் அரசியல் வாதிகளும்… ஒரு கொலைக் குற்றவாளியைப் போல அர்னாப்பை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார்?

– சரத் பவார் அஜித் பவாரின் தேர்தல் முடிந்து கூட்டணி அரசின் குள்ள நரித்தனத்தை அம்பலப்படுத்தினார். – பால்கரில் இரண்டு இந்து துறவிகளை கம்யூனிஸ்ட் கயவர்கள் போலிஸ் கண்முன் தீ வைத்து எரித்ததை வெளிக் கொணர்ந்தார்.

– சசிதரூர் மனைவி தற்கொலை அல்ல கொலை என்பதை எடுத்துக் காட்டி சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தினார்….

– சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை தற்கொலை என மறைக்க முயன்ற போலிஸ் நரிகளை சிபிஐ வளையத்தில் கொண்டு வந்தார்….-உபரியாக இத்தனை நாள் அத்தனை நடிகர்களும் போதை மருந்திற்கு அடிமைப் பட்டும் அந்த போதை வியாபார நெக்சஸையும் வெளிக் கொணர்ந்தார்…

– கங்கணா ரணாவத் எனும் நேர்மையான நடிகை அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார் என்பதற்காக அவரது அலுவலகத்தை இடித்த சிவசேனா காங்கிரஸ் அரசின் எதேச்சைய திகாரத்தை தோலுரித்துக் காட்டினார்….!

ஓ… அர்னாப் இதையெல்லாம் செய்தார் என்பதற்காக அவர்மீது அரசு ஆணயத்தின் நகலை வெளியிட்டார் என்று ஒரு வழக்கு… விசாரணை என்ற பெயரில் மணிக்கணக்காக இழுத்தடிப்பு. கடைசியில் நீதிமன்றம் தலையில் குட்டிய பின் பின்வாங்கியது மகா. அரசு.

அடுத்து அவர் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் பணம் கொடுத்து தில்லு முல்லு செய்தார் என ஒரு கேனத்தனமான செய்தியை தனது அடிமை செய்தித் தாள் இந்தியா டுடே மூலமாக வெளியிட்டு, நகைச்சுவை நாயகனாக மிளிர்ந்தார் மும்பாய் கமிஷனர் பிக்ரம் சிங்….

இதை அர்னாப் நேற்று எதிர் கொண்டு தனது 9:00 மணி விவாதத்தில் எத்தனை அசட்டுத்தனமாக தன்னுடன் விளையாடுகிறார்கள் என்று வெளிப்படுத்தினார்….!ஆத்திரமுற்ற பிக்ரம் சிங் இன்று காலை முடித்து வைக்கப்பட்ட ஒரு பழைய கோப்பை மீண்டும் கையில் எடுத்து காலையில் அவரை அராஜகமாக அத்து மீறி அடக்கு முறையில் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்….!

பத்திரிக்கை சகோதரர்களே!.. ஒன்றை நினைவில் வையுங்கள்… இன்று அர்னாப், நாளை நீங்கள். அராஜக அரசு இயந்திரம் உங்கள் குரல்வளையை நெறிக்கும் போது தெரியும் நிலைமை….

உங்களைப் போல எனக்கும் அர்னாப் சார்ந்துள்ள அரசியல் அமைப்பு, அவர் கருத்துகளில் மாறுபாடு உண்டு. ஆனால் அவர் கருத்தைச் சொல்லும் சுதந்திரம் மறுக்கப் பட்டால் நாம்தான் ஒன்று சேர்ந்து அராஜகத்தைக் கேள்வி கேட்க வேண்டும்.

ஒரு சக பத்திரிக்கையாளனாக….

முயல் தூங்கினால் ஆமை ஜெயிக்கும்… தாமதிக்கப் படும் நீதி மறுக்கப் பட்ட நீதியாகும்….

ஒரு பத்திரிக்கையாளனின் சுதந்திரத்தைப் பறிக்கும் மகாராட்டிர அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்!

error: Content is protected !!