நடுத்தர வர்க்கத்தினருக்கு பெட்ரோல் கார் டீசல் கார் எது பெஸ்ட்….?

நடுத்தர வர்க்கத்தினருக்கு  பெட்ரோல் கார் டீசல் கார் எது பெஸ்ட்….?

ஒரு கார் ஷோ ரூம்ல ஒரே மாடல்ல பெட்ரோல் மற்றும் டீசல் கார் இருக்கு. டீலர் சொல்றார். பெட்ரோல் கார் எடுத்தீங்கன்னா நாங்க 2 வருஷத்துக்கு அல்லது 30ஆயிரம் கி.மீக்கு உங்களோட காருக்கு பெட்ரோல் இலவசமாத் தர்றோம்னும் டீசல் காருக்கு எந்த சலுகையும் கிடையாது மட்டுமில்லாம நீங்க ஒன்றரை இலட்சம் கூடுதல் விலை கொடுத்து வாங்கனும்னு சொன்னா நாம எந்த காரை செலக்ட் பண்ணுவோம்னு சொல்லுங்க…!

car oct 13

கார் விற்பனை ஆங்காங்கே களைகட்டி இருக்கு இப்போ.. நிறைய ஆஃபர்களோட கார்கள் விற்பனை பண்றாங்க. சில கார்களோட விலையில் 30 ஆயிரத்திலேந்து 80 ஆயிரம் வரை கூட மாடலுக்கேற்ப தள்ளுபடி பண்ணி விக்கிறாங்க. காரணம் இந்த வருடத்திற்கான மாடல் வர்ற டிசம்பரோட முடிஞ்சுடும். அதனால இந்த வருஷத்துல தயாரிச்ச மாடல் கார்களை எல்லாம் இந்த வருஷத்திலேயே வித்தாகனும். அதுக்குத்தான் போட்டிபோட்டுகிட்டு விழாக்கால சலுகைன்னு சொல்லி ஆஃபர்களை அள்ளிவிடறாங்க.

சரி விஷயத்திற்கு வருவோம். வருஷக்கடைசியில 30ஆயிரம் தள்ளுபடி விலையில் கிடைக்குதேன்னு ஒரு காரை வாங்கி சந்தோஷப்பட்டுக்கலாம். ஆனா ஒரு நாலைஞ்சு வருஷம் கழிச்ச விக்கிறப்போ அந்த வருஷத்தோட டிசம்பர் மாதக் காரோட விலை 70ஆயிரம் விலை குறைச்சுதான் கேப்பாங்க. வருஷத்தோட கடைசி மாசம் கார் வாங்கி அதை புது வருஷத்திலே பதிவு பண்ணியிருந்தாலும் மாடல் என்னவோ அதுக்கு முந்தின வருஷத்தோடதான். அதுக்கான விலையை நிர்ணயிக்கறப்போ பதிவு பண்ண வருஷத்தை கணக்கில் எடுத்துட்டு விலையை நிர்ணயம் பண்ணமாட்டாங்க. அங்க காரோட மாடலுக்கான ரேட் தான் முடிவாகும்.. அதனால ஆஃபர்ல வாங்கிற கார்களுக்கு இந்த விவரங்களைச் நாம சொல்லி இன்னும் கூடுதலா டிஸ்கவுன்ட் கேட்டுப் பெறலாம்.. கேட்கிறவங்களுக்கு கொடுக்கவும் பல கார் டீலர்கள் தயாரா இருக்காங்க..

சரி இது ஒருபக்கம் இருக்கட்டும். இன்றைய சூழலில் எந்த கார் வாங்கறது. பெட்ரோல் காரா டீசல் காரா.. குறைந்த அளவு பயன்படுத்தக்கூடியவர்களா இருந்தா பெட்ரோல் கார்தான் பெஸ்ட் சாய்ஸ்ன்னு சொல்லலாம். ஒரே மாடல் கார் பெட்ரோல் மற்றும் டீசல்ல இருக்குன்னா நாம டீசல் காருக்கு போனா அதனோட விலை பெட்ரோல் காரைவிட 1.25 இலட்சத்திலேந்து 1.75 வரை கூடுதலா இருக்கும். இப்போ தோராயமா ஒரு 1.50 இலட்சம் அதிகமா இருக்கிற ‍டீசல் காருக்கு பதிலா பெட்ரோல் கார் வாங்கினா அந்த 1.50 இலட்சம் பணத்திற்கு இன்றைய பெட்ரோல் விலைப்படி ஏறத்தாழ 2325 லிட்டர் பெட்ரோல் வாங்க முடியும். 2325 லிட்டர் பெட்ரோல் மூலம் அந்த காரில் ஏறத்தாழ 35ஆயிரம் கிலோ மீட்டர்(‍தோராயமாக லிட்டருக்கு 15கி.மீ. என்ற அடிப்படையில்) பயணம் செஞ்சுட முடியும். வருஷத்துக்கு 10 லேந்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் ஓட்றவங்க ஏறத்தாழ 3 வருஷம் டீசல் காருக்கு கொடுக்கிற அதிகப்படியான விலையில் பெட்ரோல் போட்டுக்க முடியும்..

டீசல் காரைவிட பெட்ரோல் கார் மெயின்ட்டனென்ஸ் ரொம்பவே குறைவு. முன்னரெல்லாம் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விலை வித்தியாசம் என்பது ரொம்பவே அதிகமா இருந்துச்ச.அதனால டீசல்காருக்கு போனாங்க. ஆனா அது இப்போ வெறும் 10 ரூபாய் என்ற அளவில் வந்துடுச்சு.. சோ லோ மைலேஜ், எப்பவாச்சும் தான் கார் யூஸ் பண்ணுவோம்னு நினைக்கறவங்களுக்கு பெட்ரோல் கார்தான் பெஸ்ட் சாய்ஸ்..

பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தறவங்க ஆசையா கார் வாங்கி நாமும் குடும்பத்தோட போகலாம்னு நினைக்கற வங்களுக்காக இந்தப்பதிவு.. தினம்தோறும் அதிகப்படியான கிலோமீட்டர்களை காரில் சுற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த தகவல் பொருந்தாது..

உதய்குமார்

Related Posts

error: Content is protected !!