காமன்வெல்த் போட்டி நிறைவு : 61 பதக்கங்களை வென்று இந்தியா 4-வது இடத்தை பிடித்தது!
72 நாடுகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியகொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீரர் நிகத் ஆகியோர் ஏந்தி அணியை வழிநடத்தி சென்றனர். இறுதியாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று, இந்தியா பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஜூலை 29 தொடங்கிய இந்த விளையாட்டு தொடர் ஆகஸ்ட் 8-ம் தேதியுடன் நிறைவு பெற்றுள்ளது.
இந்த போட்களின் முடிவில் ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடம் பிடித்தது . இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம்) இரண்டாவது இடத்தையும், கனடா 92 பதக்கங்களுடன்(26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் இருந்தது.
இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் இந்தியா சார்பில் 106 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர், 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்று விளையாடி இருந்தனர். இது இந்திய அணியின் காமன்வெல்த் வரலாற்றில் ஐந்தாவது சிறந்த செயல்பாடாக உள்ளது. கடந்த 2010 டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த்தில் மொத்தம் 101 பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா. நடப்பு எடிஷனுக்கான காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா.
பதக்கம் வென்ற வீரர்களின் விவரம்…
தங்கம்
1. பிவி சிந்து -– பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர்
2. லக்ஷ்யா சென் -– பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர்
3. நிகத் ஜரீன் – –குத்துச்சண்டை பெண்கள் லைட் ஃப்ளைவெயிட்
4. வினேஷ் போகத் – –மல்யுத்தம் – மகளிர் ஃப்ரீஸ்டைல் 53 கிலோ
5.ரவி குமார் தாஹியா -– மல்யுத்தம் – ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ
6. நவீன் – மல்யுத்தம் –- ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 74 கிலோ
7.சரத் கமல் -– டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு
8. நீத்து கங்காஸ் -– குத்துச்சண்டை மினிமம் வெயிட்
9. அமித் பங்கல் -– குத்துச்சண்டை ஃப்ளைவெயிட்
10. பஜ்ரங் புனியா -– மல்யுத்தம் – ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ
11. சாக்ஷி மாலிக் -– மல்யுத்தம் – பெண்கள் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ
12. தீபக் புனியா -– மல்யுத்தம் – ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ
13. மீராபாய் சானு -– பளு தூக்குதல் மகளிர் 49 கிலோ
14. ஜெர்மி லால்ரின்னுங்கா -– பளு தூக்குதல் ஆடவர் 67 கிலோ
15. அச்சிந்தா ஷூலி – –பளு தூக்குதல் ஆடவர் 73 கிலோ
16. லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா, ரூபா ராணி டிர்கி – – லான் பவுல்ஸ் நால்வர் ஆட்டம்
17. சரத் கமல், சத்யன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி – – டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி
18. சுதிர் – பாரா பவர் – லிஃப்டிங் ஆடவர் ஹெவிவெயிட்
19. பவினா படேல் –- டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர்
20. எல்டோஸ் பால் -– ஆடவர் டிரிபிள் ஜம்ப்
21. சரத் கமல், ஸ்ரீஜா அகுலா – – டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு
22. சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி –- பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர்
வெள்ளி
1. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
2. அன்ஷு மாலிக் -– மல்யுத்தம் – பெண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ
3. முரளி ஸ்ரீசங்கர் -– ஆடவர் நீளம் தாண்டுதல்
4. கிடாம்பி ஸ்ரீகாந்த், சாத்விக் சாய்ராஜ், சுமீத் ரெட்டி, லக்ஷ்யா சென், சிராக் ஷெட்டி, ட்ரீசா ஜாலி, ஆகார்ஷி காஷ்யப், அஸ்வினி, காயத்ரி கோபிசந்த், பி.வி.சிந்து – – பேட்மிண்டன் கலப்பு அணி
5. சரத் கமல், சத்யன் – – டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர்
6. விகாஸ் தாக்கூர் -– பளு தூக்குதல் ஆடவர் 96 கிலோ
7. சுஷிலா தேவி லிக்மாபம் -– ஜூடோ மகளிர் 48 கிலோ
8. பிந்த்யாராணி தேவி -– பளு தூக்குதல் மகளிர் 55 கிலோ
9. துலிகா மான் – – ஜூடோ மகளிர் 78+ கிலோ
10. சங்கேத் சர்கார் -– பளு தூக்குதல் ஆடவர் 55 கிலோ
11. அவினாஷ் சேபிள் -– ஆடவர் 3000 மீ ஸ்டீபிள்சேஸ்
12. பிரியங்கா கோஸ்வாமி –- மகளிர் 10 கிலோ மீட்டர் ரேஸ் வாக்
13. தினேஷ் குமார், சந்தன் குமார் சிங், சுனில் பகதூர், நவநீத் சிங் -– லான் பவுல்ஸ் ஆடவர் அணி – நால்வர் பிரிவு
14. அப்துல்லா அபூபக்கர் -– ஆடவர் டிரிபிள் ஜம்ப்
15. சாகர் அஹ்லாவத் – – குத்துச்சண்டை ஆடவர் சூப்பர் ஹெவிவெயிட்
16. இந்திய ஆடவர் ஹாக்கி அணி
வெண்கலம்
1. குருராஜா பூஜாரி -– பளு தூக்குதல் ஆடவர் 61 கிலோ
2. விஜய் குமார் யாதவ் -– ஜூடோ ஆடவர் 60 கிலோ
3. ஹர்ஜிந்தர் கவுர் -– மகளிர் பளுதூக்குதல் 71 கிலோ
4. லவ்பிரீத் சிங் –- பளுதூக்குதல் ஆடவர் 109 கிலோ
5. சவுரவ் கோசல் -– ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர்
6. குர்தீப் சிங் -– பளுதூக்குதல் ஆடவர் 109+ கிலோ
7. தேஜஸ்வின் சங்கர் -– ஆடவர் உயரம் தாண்டுதல்
8. திவ்யா கக்ரன் –- மல்யுத்தம் – மகளிர் 68 கிலோ
9. மோஹித் கிரேவால் –- மல்யுத்தம் – ஆடவர் 125 கிலோ
10. ஜெய்ஸ்மின் -– குத்துச்சண்டை மகளிர் லைட்வெயிட் 60 கிலோ
11. பூஜா கெலாட் – மல்யுத்தம் – ஃப்ரீஸ்டைல் மகளிர் 57 கிலோ
12. பூஜா சிஹாக் –- மல்யுத்தம் – ஃப்ரீஸ்டைல் மகளிர் 76 கிலோ
13. ஹுசாமுதீன் –- ஆடவர் குத்துச்சண்டை ஃபெதர்வெயிட்
14. தீபக் நெஹ்ரா -– மல்யுத்தம் – ஃப்ரீஸ்டைல் ஆடவர் 97 கிலோ
15. சோனால்பென் படேல் -– பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு
16. ரோகித் டோகாஸ் -– குத்துச்சண்டை ஆடவர் வெல்டர்வெயிட் 67 கிலோ
17. இந்திய மகளிர் ஹாக்கி அணி
18. சந்தீப் குமார் – – ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம்
19. அன்னு ராணி -– மகளிர் ஈட்டி எறிதல்
20. சவுரவ் கோசல் மற்றும் தீபிகா பலிக்கல் –- ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர்
21. கிடாம்பி ஸ்ரீகாந்த் – – பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு
22. காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி -– பேட்மிண்டன் மகளிர் இரட்டையர்
23. சத்யன் –- டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு
நிறைவு விழா
இந்நிலையில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார்.
அடுத்த காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றிருந்தன.
நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியகொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீரர் நிகத் ஆகியோர் ஏந்தி அணியை வழிநடத்தி சென்றனர்.