September 27, 2022

காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள ’பக்கா’ திரைப்படம் ஏப்ரல் 27 ம் தேதி ரிலீஸ்!

பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக் கும் படம் “பக்கா “.விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்க முத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள இந்த பக்கா திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 27 ம் தேதி வெளியாக உள்ளது. இந்த ப்டம் குறித்து , “கிரிக்கெட் ரசிகரான நான் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன். ரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா (நிக்கி கல்ராணி) கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா (பிந்து மாதவி) இப்படி மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான பக்கா படம். நம்மால் மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக பக்கா இருக்கும்.இது வரை நான் ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் எனக்கு புதிய பரினாமத்தை வெளிக்கொண்டு வரும் படமாக அமையும். கமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும் என்று விக்ரம்பிரபு முன்னரே குறிப்பிட்ட்டிருந்தது நினைவு கூறத்தக்கது.

ஒளிப்பதிவு – எஸ்.சரவணன் / இசை – C.சத்யா / பாடல்கள் – யுகபாரதி, கபிலன்

கலை – கதிர் / நடனம் – கல்யாண், தினேஷ்

ஸ்டன்ட் – மிராக்கிள் மைகேல் / எடிட்டிங் – சசிகுமார்

தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார்

இணை தயாரிப்பு – B.சரவணன்

தயாரிப்பு – T.சிவகுமார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.S.சூர்யா