October 22, 2021

உங்களுக்கு பிடிச்ச கலரைச் சொல்லுங்க- உங்கக் குணத்தை தெரிஞ்சக்கலாம்

வர்ணங்கள் மனிசங்களோட குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருத்தருக்கு பிடிச்ச கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதே மாதிரி அவங்க வைத்திருக்கும் கார், பைக்-களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் .இம்புட்டு ஏன்? காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம்.

colour oct 28

ஆக வர்ணங்கள் ஜஸ்ட் அழகை மட்டும் பிரதிபலிக்கலை. ஒருத்தரோட குணத்திலும் நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன! அதனால் அறைக்கு வண்ணம் தீட்டும்போதும், ஆடையைத் தேர்வு செய்யும்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்’ அப்ப்டீன்னும் சொல்றாங்க உளவியலாளர்கள்.

இப்ப.. ஆய்வாளர்கள் சொன்னது சரிதான என்பதை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.

மஞ்சள்:

மஞ்சள் நிறப் பிரியர்களின் காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவங்களோட காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப் பார்கள். இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள்.

பச்சை:

பச்சையை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் இந்த நிறத்தை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வுகள் அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டி விடுவார்கள். மனசையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக்கி, புத்துணர்ச்சி, சுயக்கட்டுப்பாடு மற்றும் மனதுக்கு இணக்கமான உணர்வுகளைத் தரும். மனஅழுத்தம், தடுமாற்றம், பதற்றம் ஆகியவற்றைக் குறைக்க உதவும். தங்கள் அறையில் வெளிர் பச்சை நிறத்தை பூசலாம். அடர் பச்சை வேண்டாம்.

நீலம்:

அமைதியையும் நிதானத்தையும் அளிக்கும். அடக்கம் உள்ளவராகக் காண்பிக்கும். உள்ளுணர்வைத் தூண்டும். படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். தாம்பத்ய’ விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். இந்த நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிகமிருக்கும். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும்.மன அழுத்தம், மனப்பதற்றம், தூக்கமின்மையால் அவதியுறுபவர்கள் தங்கள் படுக்கை அறையில் இந்த வண்ணத்தைப் பூசலாம்.

இளஞ்சிவப்பு:

எதிர்த்துப் போராடும் ஆற்றலைத் தரும். ஊக்கம், எதையும் செய்து முடிக்கும் தன்னம்பிக்கையைத் தரும். ரத்த அழுத்தம், மூச்சுவிடுதல், இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பு ஆகியவற்றைச் சீராக்கும்; உத்வேகத்தையும் நம்பிக்கையையும் தரும்.

சிவப்பு:

சிவப்பு வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையில் கண்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப்பட்டதை அடையாமல் விட மாட்டார்கள். ஆனாலும் இக்கலர் மகிழ்ச்சியைக் கூட்டும்; சக்தியைத் தூண்டும்; ரத்த அழுத்தம், மூச்சுவிடுதல், இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பு ஆகியவற்றைச் சீராக்கும். பயம், பதற்றம் நீங்கும். அதிக கோபம் கொள்பவர்கள் இந்த நிறத்தைத் தவிர்ப்பது நல்லது.

ஆரஞ்சு:

உடல் மற்றும் மனதைத் தூண்டும். புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். படைப்பாற்றல், மகிழ்ச்சியைத் தூண்டும். சமூகத்தோடு இணைந்து வாழும் உணர்வை ஏற்படுத்தும். மன அழுத்தம், எதிர்மறை எண்ணம் தோன்றுபவர்கள் தங்கள் அறையில் இந்த நிறத்தை அடிக்கலாம்.

கறுப்பு:

ஓய்வு மனநிலை மற்றும் வெறுமையை அளிக்கும். தனக்குள்ளே ஆற்றல் பெருகுவதாகவும், எதிலும் சாதகமான சூழல் நிலவுவதாகவும் ஓர் எண்ணத்தை ஏற்படுத்தும். அதாவது கறுப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாரிடமும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள். இறுக்கமான மனிதர்களாக இருப்பதால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது.மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள்.

வெண்மை:

வெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் `காதலாவது கத்தரிக்காயாவது..’ என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.