பெற்றவர்களின் கல்லூரி கனவுகள்! குழந்தைகளின் குழப்பங்கள்!

பெற்றவர்களின் கல்லூரி கனவுகள்! குழந்தைகளின் குழப்பங்கள்!

ந்த வருடம் வழக்கம்போல (வெக்கம், மானம், சூடு, சொரனை எல்லாம் அரசிடம் ஸ்டாக் இல்லாததால்) நீட் தேர்வும் நடந்து முடிந்து விட்டது. மற்ற தேர்வுகள் தொடர்கிறது… கடைசியாக காக்க வைத்த CBSE தேர்வு முடிவுகளும் வந்து அட்மிஷன் ஜோராக நடக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் குழந்தைகளிடம் வழகம்போல அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பதில் தெளிவு இல்லை, குறைந்த பட்சம் 10% கூட அந்த தெளிவு இல்லை.. அங்கே இருக்கின்ற சில தெளிவுகளும் பெற்றோர்கள் திரும்ப திரும்ப அவர்களின் மனதில் ஆழமாக விதைக்கப்பட்ட விதைகளின் மரங்களே… எனவே அது தவறான கணிப்புகளாக, எதிர்பார்ப்புகளாக இருக்கும் பட்சத்தில், அந்த படிப்புகள் மேலும் ஒரு சுமையாகத்தான் அவர்ளுஉக்கு இருக்கும்.. பெரும்பான்மையான மிடில் கிளாஸ் குடும்பங்களில் அந்த படிப்பு என்பது வேலைக்கான ஒரு வாய்பாகவே பார்க்கப்பட்டு, எதிர்கால வருமானத்தின் அட்சய பாத்திர்மாகி, அதற்கான முதலீட்டின் வாயிலாகவே பார்க்கப்படுகிறது.

நீட் என்று மிகவ்பெரிய கனவுகளோடு வரும் குழந்தைகள், அந்த படிப்பு வெறும் MBBS/BDS உடன் முடிவதில்லை. MD/MDS என்று இல்லாமல் அது பூர்த்தி அடையாது. அப்படி இல்லாத பட்சத்தில் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை கிடைத்தால், ஓரளவு சம்பளம் கிடைக்கும். ஆனால் பிரைவேட்டாக டாக்டராக பணிபுரிய வேண்டுமெனில் ₹15,000 சம்பளத்திற்கு கூட வேலை கிடைப்பதில்லை என்பதை பெரும்பாலும் பலர் அறிந்திருக்க வில்லை. அதுவும் 1 கோடி செலவு செய்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்து வெளியே வருபவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால், அனுபவத்தை கொடுக்கும் மருத்துவமனைகளுக்கு நீங்கள்தான் காசு கொடுக்க வேண்டும் என்றதொரு மோசமான நிலையில் தான் வேலை வாய்ப்புகள் உள்ளது.

அடுத்து எஞ்ஜினியரிங் கல்லூரிகளில், கடந்த இரண்டு IT திறையில் (Due to attrition related suffling) வருடமாக வேலை வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஒரு மாயை கிரியேட் செய்யப்பட்டு, அதை சமளிக்கும் விதமாக கேம்பஸ் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் இருந்தது. அதனால் சென்ற வருடம் இருந்த கம்ப்யூட்டர் கோர்ஸுகள் பெரும்பாலும் 3 ஆக இருந்த பிரிவுகள் 6 ஆக அதிகரித்துள்ளது. மேனேஜ்மெண்ட் கோட்டாவில் 5-7 லட்சம் விலைபோகும் பெரும்பான்மையான சீட்டுக்கள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டது. எனவே அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள் வெளிவருவார்கள். ஆனால் இன்றே பல IT கம்பெனிகளில் மிக அவசியமான புராஜக்டுகளை மட்டும் தொடரவும், மற்றவைகளை நிறுத்தி வைக்கவும் ஆரம்பித்ததன் விளைவு, அவர்களுக்கான வேலைக்கே ஒரு வெற்றிடம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதை பலர் அறிந்திருக்கவில்லை.

அமெரிகாவில் ஏற்கனவே Recession க்கான காரணிகள் வந்துவிட்டதால், வேலை இழப்புகள் ஆரம்பித்துவிட்டது. அது மேலும் பரவும் சூழ்நிலையில் அதன் பாதிப்பு இந்தியாவில் உடனே எதிரொலிக்கும். அதே சமயம் ஆட்டோமேஷன் போன்ற வளர்ச்சிகளால் மனித வளத்தின் சார்பை வெகுவாக குறைக்க ஆரம்பித்து விட்டது எனபதும் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை. அப்படி இருக்கும் பட்சத்தில் அடுத்த சில வருடங்களில் இந்த துறைகளில் வேலை வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால், கடன் வாங்கி படிக்க வைக்கும் பெற்றோர்கள் இதை முக்கியமாக கவனத்தில் கொள்ளவும்.

அதே வேளையில், எலெக்ட்ரிக் கார்கள் என்று ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அங்கிருந்து வரும் மாணவர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக உயர வாய்ப்புகள் உண்டு. அவர்களில் சிலர் முதலீட்டாளர்களாக மாறவும் வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் அரசாங்கத்தின் கொள்கை என்பது வேலைக்காரார்களை உறுவாக்குபவரை விட தொழில் முனைவோர்களை அதிகம் ஊக்குவிக்கிறது எனும் பட்சத்தில், அது போன்ற மாற்றங்களை மனதில் இருத்தி கல்வி பயில்பவர்களுக்கு எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் அதிகம்.

கொரானா, உக்ரைன் போருக்கு பின்பு உலகத்தில் 48 நாடுகள் பொருளாதார நசிவை பெருமளவில் சந்தித்து அவற்றில் சில நாடுகள் எப்போது வேண்டுமானாலும் திவால் ஆகும் நிலையில் உள்ளது. அதில் இலங்கை ஏற்கனவே பலியாகி, அடுத்து பாகிஸ்தான் அடுத்து எப்போது என்று காத்துக்கொண்டிருக்கிறது. உக்ரைன் போருக்கு பின்பு ஐரோப்பிய நாடுகள் பல மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகும் சூழல் உறுவாகியுள்ளது. ஜெர்மனி போன்ற நாடுகளே மிக மோசமான பொருளதார சூழலில் உள்ளது. சீனாவின் பொருளாதாரம், உலக நாடுகளின் நம்பிக்கை இழப்பால் பெரிய சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது. அதன் விளைவாக, மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அது கடன் கொடுத்த நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக திவால் ஆவதில் அது பெரிய பிரச்சினையை சந்திக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் அமெரிக்காவின் வல்லரசுக்கான பிடி தளர்கிறது. ரஷ்யா, சீனா, இந்தியாவின் கரங்கள் அமெரிக்காவின் எதிர்கால வல்லரசுக்கான வாய்ப்பை கேள்விக்குறி ஆக்கிவிட்டது. அதற்கு முதல் சாட்சி அமெரிக்க $ வீழ்ச்சி என்பதை ஏற்கனவே எழுதியுள்ளேன். அது அடுத்த ஆண்டில் கண்கூடாக உணர முடியும்.

சரி, அதற்காக படிக்க வைக்க வேண்டாமா?

இல்லை படிக்க வையுங்கள். எந்த துறையிலும் சிறந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் என்றும் உண்டு. இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 20 ஆண்டுகளில் மிக அதிகமாக இருக்கும் எனும் பட்சத்தில், அமெரிக்காவை சார்ந்து இருக்கும் IT துறைகளைவிட சுய சார்பினை ஏற்படுத்தும் படிப்புகள் பெரிய ஏற்றத்தை கொடுக்கும். எனவே அவர்களின் விருப்பத்தினை அலசி ஆராய்ந்து அதற்கான படிப்பு அவர்களை உயர்த்தலாம்.

இந்த நிலையில் ஒரு எஞ்ச்ஜினியரிங் கல்லூரியில் படிக்க ஒரு வருடம் ஃபீஸ் 2.5 + 0.5 லட்சம், 1 லட்சம் ஹாஸ்டல் ஃபீஸ், மேலும் 1 லட்சம் இதர செலவிகள் என்று நான்கு வருட முதலீடு என்பது 20 லட்சம்வரை இருக்கும் எனும் பட்சத்தில், வருமானமின்றி கடன் வாங்கி படிக்க வைப்பவர்கள் நிலை சமாளிக்க முடியாமல் போனால், அதை தொடர முடியாமல் கூட ஆக வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளவும்.

நம் குழந்தைகளுக்கு படிப்பை கொடுப்பது நம் கடமை என்றாலும், அதை முழுதாக கொடுக்கும் தகுதிகள், நிதி நிலைமை நமக்கு இருக்கிறதா என்று கணக்குகளை செய்த பின்னரே தீர்க்கமான முடிவுகளை எடுங்கள். Peer pressure எனும் மற்றவர்கள் தூண்டுதலுக்கு இறையாகி விடாதீர்கள் உங்கள் குழந்தைகளின் படிப்பு சிறக்கவும், அவர்கள் திறமை வெளிப்படுத்த அது ஒரு வாய்ப்பை கொடுத்து அவர்களின் எதிர்காலத்தையும், அதற்கான உங்கள் நிதி நிலையையும் சீர்படுத்த இறைவன் அருளட்டும்..

மரு. தெய்வசிகாமணி

error: Content is protected !!