ஆயிரம் அடிகள் நடந்தால் ஒரு நாணயம் கொடுக்கும் ஆப்!

ஆயிரம் அடிகள் நடந்தால் ஒரு நாணயம் கொடுக்கும் ஆப்!

இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் இதய நோய், சர்கரை நோய் , உயர் கொழுப்பு , உயர் இரத்த அழுத்தம் கேன்சர், எலும்புகளை பலமிழக்க செய்யும் ஆஸ்டியோ பொரோஸிஸ் போன்ற கொடிய நோய்களை வரவிடாமல்ல் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர வேறு எந்த மாற்று வழியும் குறுக்கு வழியும் இல்லை. பல விதமான ஆராய்ச்சி முடிவுகளும் இதை தான் சொல்கிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் தசைகளை வலிமையுறச்செய்யவும் மன அழுத்தம் எரிச்சல் போன்றவற்றை துரத்தி மன அமைதி மற்றும் நல்ல தூக்கம் தருவதற்கும் உடற்பயிற்சி அவசியம்.

tec may 22

இன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி உடல் நலம் கெட்டபின் தான் அதன் தேவையை உணர்கிறார்கள். பலரும் ஒருமுறை இதய நோய் அல்லது நீரிழிவு தாக்கியபின் தான் உடற்பயிற்சியை தொடங்குகிறார்கள். இத்தகைய நோய்கள் ஒருமுறை தாக்கினால் அதன் பாதிப்பு ஆயுள் வரை கூடவே இருக்கும். வருமுன்னே காவாதான் வாழ்க்கை நெருப்புக்கு முன் இடப்பட்ட துரும்பாய் பொசுங்கிப் போகும் என்பது பொய்யா மொழி. எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை என்பவர்கள் பின்னால் தங்கள் பெரும்பாலான நேரத்தை மருத்துவ மனைகளில் பழியாய் கிடந்து தீர்க்க நேரும். உடல் இயக்கக் குறைவால் வரும் இத்தகைய நோய்கள் தான் மிகவும் அதிக மருத்துவச் செலவு ஏற்படுத்தக்கூடியதும் கூட. உடற் பயிற்சி செய்வதற்கு தேவையான சக்தி என்னிடம் இலலை,என்னால முடியலப்பா என்று சொல்பவர்களுக்கு தெரியாத ஒன்று. எளிய உடற் பயிற்சிகளை அவர்கள் முதலில் செய்யத் தொடங்கினால் விரைவில் அவர்கள் உடல் வலிமையுறுவதை உணர முடியும். உடற்பயிற்சி செய்ய விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயிற்சி மையங்களோ தேவையில்லை

இதனிடையே நாம் உடற்பயிற்சி செய்வதைக் கண்காணிக்கவும், நம்மை ஊக்குவிக்கவும் வழி செய்யும் ஸ்மார்ட்போன் செயலிகள் பல இருக்கின்றன. இந்த வரிசையில் அறிமுகமாகியிருக்கும் புதிய செயலி ஒன்று முற்றிலும் புதுமையான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது.

‘ஸ்வெட்காயின்ஸ்’ எனும் அந்தச் செயலி, உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வதற்கு ஏற்ப டிஜிட்டல் நாணயங்களைப் பரிசாக வழங்குகிறது. இந்த டிஜிட்டல் நாணயங்கள்தான் ‘ஸ்வெட்காயின்ஸ்’ என குறிப்பிடப்படுகிறது. ஆயிரம் அடிகள் நடந்தால் ஒரு நாணயம் பெறலாம். இவ்வாறு நடையாக நடந்து சேமிக்கும் டிஜிட்டல் நாணயங்களை ஃபிட்னஸ் சேவை சார்ந்த பொருட்களை வாங்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரிட்டனில் முதல் கட்டமாக ஐபோன்களில் இந்தச் செயலி அறிமுகமாகி உள்ளது. அடுத்த கட்டமாக ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வரவுள்ளது.

மேலும் தெரிந்துக் கொள்ள :https://sweatco.in/int

சைபர்சிம்மன்

error: Content is protected !!