முதல்வர் ஜெ.தான் ; அவரு இலாக்காகளை மட்டும் ஓ பி எஸ் கவனிப்பார்!

முதல்வர் ஜெ.தான் ; அவரு இலாக்காகளை மட்டும் ஓ பி எஸ் கவனிப்பார்!

அப்போலோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சேர்க்கப்பட்டு 20 நாட்கள் ஆன நிலையில், கவர்னர் மாளிகையில் இருந்து நேற்றிரவு திடீரென அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் முதல்-அமைச்சர் ஜெய லலிதா வகித்து வந்த இலாகாக்கள் அனைத்தும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.

ops cm oct 12

கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்-அமைச்சர் ஜெய லலிதா நிர்வகித்து வந்த அனைத்துத் துறைகளும், இந்திய அரசியல் சாசனத்தின் 166 (3)-ம் ஷரத்தின்படி, நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர் திருத்தத்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தமிழக கவர்னர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரவை கூட்டங்களுக்கும் நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமே தலைமை வகிப்பார். இந்த ஏற்பாடு அனைத்தும் முதல்-அமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் பணிக்கு வரும் வரை அவரது இலாகாக்களை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார். ஜெயலலிதாதான் முதல்-அமைச்சராக தொடர்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என்னென்ன துறைகள்?

முதல்-அமைச்சர் ஜெய லலிதாவிடம் பொது, இந்திய ஆட்சிப்பணி, காவல் பணி, வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை ஆகிய துறைகள் இருந்தன. இவை அனைத்தும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் அவர் இலாகா இல்லாத முதல்-அமைச்சராக செயல் படுவார்.

error: Content is protected !!