கண்டேன் கலைஞர் கருணாநிதியை! – முதல்வர் எடப்பாடி பேட்டி

கண்டேன் கலைஞர் கருணாநிதியை! – முதல்வர் எடப்பாடி பேட்டி

நேற்றிரவே வருவதாக  சொன்ன தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை குறித்து கேட்டறிந்து கருணாநிதி நலம் என்று தெரிவித்தனர்..

உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலை யில் அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக நேற்று இரவு மீண்டும் தகவல் பரவியது. அதனால் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

இதனை அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு நேற்று இரவே சென்னைக்கு கிளம்பினார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் காமராஜ் ஆகியோர் சென்றனர். சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் சந்தித்த அவர், திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடமும் அவரது உடல்நிலை குறித்தும் முதல்வர் விசாரித்தனர். ஏற்கனவே துணை முதல்வர் பன்னீர்செல்வம் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனிடையே முதல்வர் வருகையாலும், தொண்டர்கள் குவிந்து வருவதாலும் மற்ற நோயாளிகளுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்கக் கூடாது என மருத்துவமனையை சுற்றி ஏராளமான தடுப்புகளும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன் தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது கண்டேன் திமுக தலைவர் கருணாநிதியை. அவர்உடல்நலம் சீராகவுள்ளதாக நேரடியாகவே பார்த்ததாகவும் கூறினார் . மேலும் மருத்துவக் குழு அருகிலேயே இருந்து கவனித்து வருதாகவும் கூறினார். அவரை நேரில் பார்க்கும்போது ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் உடன் இருந்ததாக தெரிவித்தார்.

error: Content is protected !!