இந்த வருஷ(மு)ம் வெக்கை தாங்க முடியாது! – உலக வானிலை எச்சரிக்கை

இந்த வருஷ(மு)ம் வெக்கை தாங்க முடியாது! – உலக வானிலை எச்சரிக்கை

வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 லட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகிக்கரைந்துள்ளது.மேலும், 2017 இல் வலுவான எல் நினோ விளைவு இல்லை என்றாலும் உலகில் ஏற்படும் மாற்றங்கள் வானிலை அமைப்பின் செயல்பாடுகள் புரிந்து கொள்வதற்கு சவாலாக உள்ளது. இது பற்றிய ஆய்வை கூட செய்ய முடியாத ஒரு நிலையில் உள்ளோம், விளைவுகளை கணிக்க முடியாத பிரதேசத்தில் இருக்கிறோம் என வெப்ப நிலை குறித்து உலக வானிலை எச்சரித்துள்ளது.

world weather may 26

அண்மையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் இவ்வருடம் 50 சதவீதத்தால் அதிகரிக்குமென, ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.எல்நினோ எனப்படும் காலநிலை மாற்றத்தால், மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் அதிகளவான வெப்ப தாக்கம் இருக்குமெனவும், அதனால் அளவுகடந்த வறட்சி, மழை வெள்ளம் ஏற்படுவதற்கு சாதகமாக அமையுமென ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஏப்ரல் மாதம் தொடங்கும் முன்பாகவே தமிழகத்தில் 3 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 101.84 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று, முன் தீனம் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 101.84 டிகிரி வெயில் பதிவானது. சேலத்தில் 100.58 டிகிரி வெயிலும், வேலூரில் 100.04 டிகிரி வெயிலும் சுட்டெரித்தது. மற்ற மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் குறைவாகத்தான் இருந்தது.சென்னை நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரியும், சென்னை விமான நிலையத்தில் 93 டிகிரி வெயிலும் அடித்தது.

கொடைக்கானலில் 67 டிகிரியும், ஊட்டியில் 74 டிகிரியும் வெயில் பதிவானது. இதனால் ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் அக்னி நட்சத்திர காலத்திலும் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க தமிழகம் முழுவதும் மின் தேவையும் அதிகரித்து வருகிறது.

error: Content is protected !!