சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீதான மீ டூ புகாரை விசாரிக்கும் கமிட்டி மீது அதிருப்தியாம்!

நம் நாட்டின் சுப்ரீம் பவர் கொண்டதாகக் கருதப்படும்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரது அவரது இல்லத்தில் இயங்கிய அலுவலகத்தில் முன்னொரு சமயம் இள நிலை உதவியாளராக பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் கடிதங்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனைவருக்கும் அனுப்பி உள்ளார். அந்த புகார் குறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட கமிட்டி ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. அந்த கமிட்டியின் முதல் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது .தனது புகாருக்கு உரிய சான்றுகளுடன் நேரில் ஆஜராகும்படி புகார் தந்த பெண்ணுக்கு கமிட்டி கடிதம் அனுப்பியது. அக்கடிதத்தை பெற்றுக்கொண்ட அந்தப் பெண் நேரில் ஆஜராவதாக பதில் தெரிவித்துள்ளார். அந்த பாலியல் புகார் கூறிய பெண் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியர்கள் வருகைக்கு முன், அர்த்தசாஸ்திரம் (400 கிமு) மற்றும் 100 கிபி யிலிருந்து மனு தரும சாத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா நிர்வகிக்கப்பட்டு வந்தது. நீதி, நிர்வாக, மற்றும் சட்டமன்ற வேலைகள் அரசர் அல்லது நிலத்தின் ஆட்சியாளரிடம் இருந்தன. ஆனால் கிராமங்கள் கணிசமான சுதந்திரத்தை கொண்டு இருந்தன. அங்கு வாழ்ந்த மக்கள் தங்களது சர்ச்சைகளை மற்றும் வேறுபாடுகளைத் தீர்க்க அவர்களின் சொந்த பஞ்சாயத்து அமைப்புகளைக் கொண்டிருந்தனர்.

பெரிய மோதல்கள் மட்டுமே கிராமத்தைக் கடந்த நீதிக் குழுக்களால் ஆராயப்பட்டன. இவ்வழக்கம் இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்புக்கு அப்பாலும் தொடர்ந்தது. இஸ்லாமிய சட்டம் “ஷாரியா” நாட்டின் முஸ்லிம்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்தியா பிரித்தானியர் கட்டுப்பாட்டில் வந்த போது இவ்விரு முறைகளும் வழக்கிழந்து பொதுச்சட்டம் பயன் படுத்தபடலாயிற்று.

அதன்படி உருவான இந்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட 28 மற்ற நீதிபதிகளைக் கொண்டிருக்கிறது. 65 வயது அடைந்த பிறகு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பணிஓய்வு பெறுகிறார்கள். மேலும் இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்படுவோர்க்கு இருக்க வேண்டிய தகுதிகள், ஒரு நபர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும், குறைந்தது ஐந்து ஆண்டுகள், ஒரு உயர் நீதிமன்றத்தின் அல்லது அடுத்தடுத்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட போன்ற நீதி மன்றங்களில் நீதிபதியாகவோ, அல்லது ஒரு உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவோ அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட போன்ற நீதி மன்றங்களில் குறைந்தது அடுத்தடுத்து 10 ஆண்டுகள் வழக்கறிஞராகவோ அல்லது அவர் ஜனாதிபதி கருத்தின்படி, ஒரு புகழ்பெற்ற சட்ட நிபுணராகவோ இருக்க வேண்டும்.

அப்படியாப்பட்ட ஜட்ஜ் ஒருவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி புகார் கடிதங்களை அந்தப் பெண் அனுப்பி இருக்கிறார். அக்கடிதங்கள் மறுநாள் 20ந்தேதி உச்சநீதிமன்றத்துக்கு கிடைத்து உள்ளது. இதற்கிடையில் புகார் பற்றிய செய்தி இணையதளங்களில் வெளியானது. அதனால் உச்சநீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அமர்வு ஒன்று இந்த புகார் பற்றி பரிசீலனை மேற்கொண்டது .அதே அமர்வில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் புகாரை மறுப்பதாக தெரிவித்தார். இந்த புகார் தெரிவித்த அந்தப் பெண் மீது மோசடிப் புகார் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிபதி கோகாய் தெரிவித்தார். குறிப்பாக பாலியல் புகாரை நீதிபதி அருண் மிஸ்ரா மிஸ்ராவும் மறுத்தார்.

இந்நிலையில் அமர்வின் நடவடிக்கைகளில் இருந்து வெளியேறிக் கொள்வதாகவும் இனி இந்த புகார் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அமர்வில் உள்ள நீதிபதிகளுக்கு அங்கீகாரம் வழங்கப் படுவதாக ரஞ்சன் கோகாய் கூறினார். அடுத்த மூத்த நீதிபதியான அருண் மிஸ்ரா நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் அமர்வு கலைந்தது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அமைப்பு பாலியல் புகார்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கை கள் முறையான முறையாக பின்பற்றப்பட வேண்டும் .அதற்கென ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து கூறியிருந்தது. இதன்படி நீதிபதி கள் எஸ். ஏ பொப்தே, என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய கமிட்டி பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற கமிட்டி உடனடியாக விசாரணை நடவடிக்கைகளை நேற்று மேற்கொண்டது.

புகார் தெரிவித்த பெண்ணுக்கு கமிட்டியின் சார்பாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது .அந்த கடிதத்தில் புகார் கூறியுள்ள தாங்கள் ,புகாருக்கு ஆதாரமான சான்றுகளுடன் வரும் வெள்ளிக் கிழமை அன்று 12.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கமிட்டி கேட்டுக்கொண்டுள்ளது.

அக்கடிதத்திற்கு பாலியல் புகார் கூறிய பெண் பதில் கடிதம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி உள்ளார். பாலியல் புகார் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள கமிட்டி துவக்கத்திலேயே நடை முறைகளை பின்பற்றத் தவறியது வருத்தம் அளிக்கிறது. கமிட்டியில் 6 உறுப்பினர்களுக்கும் குறையாமல் இருக்க வேண்டும்.மேலும் கமிட்டியின் பெண் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்று முன்னரே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது அந்த முறை பின்பற்றப்படவில்லை. விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதி, நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக தீர்மானித்து இருப்பதாக கூறினார் தனக்கு உதவ வழக்கறிஞர் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தன்னுடைய கடிதத்தில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து.