சென்னை சிட்டி யூனியன் வங்கியில் ‘ரோபோ அசிஸ்டெட்ண்ட்’

நாட்டிலேயே சென்னையில் முதன் முதலாக வங்கி தொடர்பான கேள்விகளுக்கு ரோபோ பதில் சொல்கிறது. கும்பகோணத்தைச் சேர்ந்த சிட்டி யூனியன் வங்கி அதன் சென்னை கிளையில் இந்த ரோபோவை அறிமுகப் படுத்தியுள்ளது. வங்கி தொடர்பான கேள்வி, பதில்கள் தயாரிக்கப்பட்டு செயற்கை முறையில் இந்த ரோபோவில் மென்பொருள் உதவியுடன் ”கோட்” வார்த்தைகளால் எழுதப்பட்டு வடிவமைக்கபட்டுள்ளது. தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியும் இதுபோன்ற ரோபோ சோதனை வடிவமைப்பில் இறங்கியுள்ளது.

cub bank nov 12

லட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ள சிட்டி யூனியன் வங்கியின் ரோபோ 125 கேள்விகளுக்கான பதில்களை அளித்து வருகிறது. ”வங்கியில் உங்களது கணக்கில் எவ்வளவு பணம் மீதி உள்ளது? வீட்டு கடனுக்கான வட்டி என்ன? வைப்புத் தொகை மீதான வட்டி என்ன? போன்ற கேள்விகளுக்கு லட்சுமி பதில் அளித்து வருகிறது. இதுமட்டுமின்றி, வங்கிகள் தொடர்பான முக்கிய கேள்விகளுக்கு லட்சுமி பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் தமிழில் வாடிக்கையாளர்களை வாழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது” என்று இந்த வங்கியின் எம்.டி., மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான என். காமகோடி கூறுகிறார்.நிதி தொடர்பான கேள்விகளுக்கு ரோபோ பதில் அளிப்பதில்லை. ஸ்கிரீனில் அதற்கான பதிலை அளிக்கிறது.

வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத கேள்விகளுக்கு நீங்கள் வங்கி மேலாளரை அணுகுங்கள் என்று பதில் அளிக்கிறது. ”இதுதொடர்பான கேள்விகளை நாங்கள் சேகரித்து வருகிறோம். தற்போது அந்நிய செலாவணி, வட்டி விகிதங்கள், கல்வி மற்றும் வாகன வட்டி விகிதங்கள் ஆகியவை தொடர்பான பதில்களை அளித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும்” என்று இதை வடிவமைத்த கோவையைச் சேர்ந்த விஷ்ணு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த விஜய் வி ஷா கூறுகிறார்.லட்சுமி ரோபோ வெற்றி பெற்றால், தமிழகத்தில் உள்ள மேலும் 25-30 வங்கி கிளைகளில் இந்த ரோபோ வைக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் தெரிவிக்கிறது.