.மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யத்தை வீழ்த்த மோடி எடுத்துள்ள பிரம்மாஸ்திரம்!
நேற்று வரை மேற்கு வங்காளத்தில் பிஜேபி யால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று சவால் விட்டுக் கொண்டு இருந்த மம்தா பானர்ஜி இன்று ஆடி போய் உள்ளார்.மம்தா பானர்ஜியின் அரசியல் சாம்ராஜ்ஜியத்தின் ஆணி வேரையே வெட்டி வீழ்த்த மோடி எடுத்துள்ள பிரம்மாஸ்திரம் தான் குடியுரிமை சட்ட திருத்தம்..!
இந்தியாவில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் வங்க தேச முஸ்லிம்கள் சட்ட விரோதமாக குடியேறி யுள்ளார்கள்.இதில் மேற்கு வங்காளத்தில் மட்டுமே சுமார் 1 கோடி வங்க தேச முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் பிழைப்பு தேடி இந்தியா வுக்குள் நுழைந்தவர்கள்.ஆனால் பங்களாதேசத்தில் இருந்து உயிர் பிழைக்க ஓடிவந்த இந்துக்களும் இருக்கிறார்கள்..
இந்த சட்ட விரோத குடியேறிகளை முன் வைத்து தான் 2014 பாராளுமன்ற தேர்தலில் மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குராவில் மேற்கு வங்காள மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.அப்பொழுது அவர் கூறியது என்ன வென்றால் ..பிரதர்ஸ் & சிஸ்டர்ஸ்..
வங்காள தேசத்தில் இருந்து இரண்டு தரப்பு மக்கள் அகதிகளாக இந்தியாவில் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு தரப்பினர் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு அடைக்கலம் தேடி இந்தியா வுக்கு வந்தவர்கள் அவர்கள் அனைவரும் பாரத மாதாவின் குழந்தை கள் .அவர்கள் இன்றும் பாரத மாதாவை வணங்கு கிறார்கள். அவர்கள் துர்காஷ்டமியை கொண்டாடு கிறார்கள்.இன்றும் பெங்காலியையே பேசுகிறார்கள்
அவர்களை காப்பாற்றுவது பாரத மாதாவின் மகனான என்னுடைய கடமை என்று வங்க தேசத்தி ல் இருந்து மேற்கு வங்காள ம் மற்றும் அசாமில் குடியேறியுள்ள இந்துக்களைகாப்பது என்னுடைய கடமை என்று கடந்த பாராளுமன்றதேர்தல் பிரச்சாரத்தின் பொழுதே கூறினார்…
இதைத் தான் இப்பொழுது பிஜேபி அரசு செய்து வருகிறது. இதனால் தான் அசாமில் கடந்த வருடம் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப் பட்டது. அடுத்து குடியுரிமை சட்டத்தில் சில திருத்தம் செய்து புதிய குடியுரிமை சட்டத்தை லோக்சபாவில் தாக்கல் செய்து விட்டு ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய நேரம் பார்த்து காத்து இருக்கிறது
.
இந்த புதிய குடியுரிமை சட்ட த்தின் மூலம் ஆப்கானி ஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுக ளில் இருந்து துரத்தப்பட்ட இந்துக்கள் பவுத்தர்கள் சமணர்கள் சீக்கியர்கள்மற்றும் கிறிஸ்தவ ர்களுக்கு அதாவது முஸ்லிம்அல்லாத மக்களுக்கு அவர்கள் தொடர்ந்து 6 வருடம் இந்தியாவில் தங்கியிருந்தா லே இந்திய குடியுரிமை அளித்துஅவர்களை வட கிழக்கு மாநிலங்களில் நிரந்தரமாக குடியமர்த்த இந்த சட்டம் உதவி செய்கிறது
அசாமில் சுமார் 15 லட்சம் வங்க தேச இந்துக்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இந்தியகுடியுரிமை அளித்து அசாம் மக்களோடு இணைக்கும் பொழுது அது நீண்ட கால அளவிற்கு பிஜேபியின் ஆதரவு தளமாக இருக்கும்.சூப்பர்ல…எப்படி வங்க தேச முஸ்லிம் களை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்ததோ அதே மாதிரி வங்க தேச இந்துக்களை வைத்து பிஜேபி அரசியல் செய்கிறது.
காங்கிரஸ் செய்யும் மத அரசியலால் ஏற்கனவே உடைந்த இந்தியா மீண்டும் உடைந்து போகும். ஆனால் பிஜேபி செய்யும் மத அரசியலினால் உடைந்து போன இந்தியா என்றாவது ஒரு நாள் இணைய வாய்ப்புள்ளது. அதோடு இந்தியா இன்னொரு பிரிவினையை நோக்கி செல்வது தடுக்கப்படுகிறது.
இந்து முஸ்லிம் என்று மதரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட இந்தியா என்கிற ஒரு தேசத்தின் எதிர் காலம் உறுதி செய்யப்பட வேண்டுமென்றால் இங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்க வேண் டும்.இதை உறுதி செய்யவே மத்திய அரசு குடியுரி மை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதில் என்ன தவறு இருக்கிறது? மியான்மரில் இருந்து பர்மியர்களால் துரத்தப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியாவில் குடியமர்த்த கூக்குரல் இடும் கோமாளிகள் ஒன்று பட்ட இந்தியாவில் பிறந்து காலச்சூழ்நிலையால் பாகிஸ்தான் பங்காள தேசத்தில் இந்தியப் பிரிவினையால் பந்தாடப்பட்ட இந்துக்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க கூடாதா?
வங்காள இந்துக்கள் வட கிழக்கு மாநிலங்களில் குடியமர்த்தபட்டால் பூர்வ குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்று சில கோமாளிகள் கூறு கிறார்கள்அஸ்ஸாமில் மேற்கு வங்காளத்தில் பங்க ளா தேசமுஸ்லிம்கள் ஊடுருவிய பொழுது பூர்வ குடி .மக்களின் வாழ்வாதாரம் பற்றி கவலைப்படாதவர் கள் இந்துக்களுக்கு அங்கே குடியுரிமை வழங்கப் ப்பட்டால்பூர்வ குடி மக்களின் வாழ்வாதாரம் போய் விடுமாம்…நல்லா இருக்குப்பா உங்க நியாயம்?
இந்த ்சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி கூட்டணி யில் இருந்து அஸ்ஸாம் கன பரிசத் வெளியேறிவிட்டது.
1985 ல் வங்க தேச வந்தேறிகளால் எங்களின் வாழ்க்கை பறிபோய் விட்டது இதற்கு முடிவு கட்ட வங்க தேசத்தில் இருந்து அசாமில் நுழைந்தவர்க ளை நாடு கடத்த வேண்டும் என்று ராஜிவ் காந்தி முன்னிலையில் ஒப்பந்தம் போட்டு அஸ்ஸாமை ரத்த வெள்ளத்தில்மிதக்க வைத்து அசாம் ஆட்சியை பிடித்த மாணவர் அமைப்பான அசாம்கண பரிசத் இன்று அமைதி வழியைபோதிப்பது ஆச்சரியமாக இருக்கிறது
.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அஸ்ஸாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் . சுமார்40 லட்சம் பேர் குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டு இருக்கிறார்கள். விடுபட்ட 40 லட்சம் பேரில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம் கள் தான்.இவர்களை தன்னுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி பயன் படுத்தி வந்தது..
1971ல் பங்காள தேசம் உருவாவதற்கு முன்பும் அதையொட்டியும் இந்தியாவிற்குள் நுழைந்த இந்த வங்காள முஸ்லிம்களை போருக்கு பிறகு இந்திரா காந்தி திருப்பி அனுப்பிஇருந்தால் இப்போதைய குடியுரிமை சட்டத்திற்கு தேவை இருந்து இருக்காது . அவர்களை திருப்பியனுப்ப இந்திராகாந்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று அடையாளம் அளித்து இந்திய மக்கள் தொகையோடு அவர்களையும் இணைத்து தங்களி ன் வாக்கு வங்கி யாக காங்கிரஸ் கட்சி உருவாக்கி வைத்து இருந்தது. ஆனால் அஸ்ஸாமில் பிஜேபி யின் எழுச்சி இந்த சட்டவிரோத குடியேறிகளை இப் பொழுது வீதிக்குகொண்டு வந்து விட்டது.
திருத்தம் செய்ய ப்பட்ட இந்த குடியுரிமை சட்ட மசோதாவுக்கு வட கிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு இருந்த போதிலும் சமீபத்தில் அஸ்ஸாமில் நடை பெற்ற டிரைபல் கவுன்சில் தேர்தலில் பிஜேபி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
அதே மாதிரி மேற்கு வங்காளத்திலும் வங்காள தேச இந்துக்களை நிரந்தரமாக குடியுரிமை அளிக்க வகை செய்யும் புதிய குடியுரிமை சட்டத்திற்கு மேற்கு வங்காள இந்துக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.குறிப்பாக மேற்கு வங்காள மக்களி ல் 19 சதவீதம் இருக்கும் மடுவா இன மக்கள் மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார்கள்.
ஏனென்றால் இது வரை அகதிகள் என்கிற பெயரி லேயே வாழ்ந்து வரும் இந்த மடுவா இன மக்கள் இனி நாங்கள் இந்திய குடிமக்கள் என்று உலகறிய குரல் உயரத்த்தி கூறுவார்கள். நமக்கு இது தானே வேண்டும்..
மேற்கு வங்காள மக்கள் தொகையில் சுமார் 2 கோடி அதாவது சுமார் 20 சதவீதம் இந்த மடுவா மக்கள் தான் இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் இடது சாரிக ளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் காலப் போக்கில் திரிணாமுல் காங்கிரசின் தீவிர ஆதரவாளர்களாக மாறி விட்டார்கள்.இருந்தாலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு உதாரணமாக மடுவா மக்கள் பிஜேபி யின் படு தீவிர ஆதரவாளர்களாக மாறி கொண்டு வருகிறார்கள்.
இவர்களின் வாக்கு தான் மேற்கு வங்காள அரசியலையே மாற்ற இருக்கிறது.35 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் அஸ்ஸாமில் பிஜேபி ஆட்சியை பிடிக்க முடியும் என்றால் 27 சதவீத முஸ்லிம்கள் இருக்கும் மேற்கு வங்காள த்தில் பிஜேபியால் ஆட்சியமைக்க நிச்சயமாக முடியும். இதை நோக்கித்தான் மேற்கு வங்காள அரசியல் சென்று கொண்டு இருக்கிறது.
மேற்கு வங்காள த்திலும் சுமார் 1 கோடி பங்களா தேச முஸ்லிம்கள் இருக்கிறார் கள். புதிய குடியுரி மை சட்டத்தின் மூலம் அவர்களும் வருங்காலத்தில் தனியாக அடையாளம் காணப்படுவார் கள்.அதற்கு பிறகு தான் இந்திய அரசியலின் அடையாளம் மாற இருக்கிறது.
சரிப்பா.. இந்த வங்கதேச முஸ்லிம்களை அடையாளம் கண்டு இந்தியாவில் இருந்து பங்களா தேசம் நோக்கி அவர்களை திருப்பி அனுப்ப முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம்.. நிச்சயமாக முடியாது. அவர்களுக்கு போக்கிடம் ஏது? அவர்கள் இந்தியாவில் தான் இருப்பார்கள்.ஆனால் அவர்களுக்கு குடியுரிமை நிச்சயமாக இருக்காது. குடியுரிமையே இல்லாதவர்களுக்கு ஏது வாக்குரிமை?
மேற்கு வங்காளத்தில் ஒரு கோடி வங்கதேச முஸ்லி ம் கள் இருக்கிறார்கள் என்று கணக்கு இருந்தால் அதில் குறைந்த து 60 லட்சம் பேர் வாக்குரிமை பெற்று இருப்பார்கள். ஒரு காலத்தில் தீவிர இடது சாரி ஆதரளவார்களாக இருந்த இந்த வங்க தேச முஸ்லிம்கள் இப்பொழுது மம்தா பானர்ஜியின் அதி தீவிர ஆதரவாளர்களாக மாறி விட்டார்கள்.
புதிய குடியுரிமை சட்டம் வந்துவிட்டால் அவர்கள் இந்திய குடியுரிமையை பெறும் தகுதியை இழப்பதால் வாக்குரிமை யையும் இழந்து விடுவார்கள். அப்புறம் மம்தா பானர்ஜிக்கு எங்கிருந்து ஓட்டு வரும்? புதிய குடியுரிமை சட்டத்தினால் பயன் அடையும் வங்காள இந்துக்கள் பிஜேபி பக்கம் வந்து விடுவார்கள். ஆனால் இதனால் வங்கதேச முஸ்லிம்கள் வாக்குரிமை யை இழப்பதால் மம்தாவின் அரசியல் முடிவுக்கு வந்து விடும்.
பிஜேபி அரசு கொண்டு வரவுள்ள குடியுரிமை சட்டம் இப்பொழுது பிஜேபிக்கு மேற்கு வங்காளத்தில் அரசியல் ரீதியாக பயன் அளித்தாலும் எதிர் காலத்தில் இந்தியா என்கிற தேசத்தில் இன்னொரு பிரிவினை என்கிற பேச்சுக்கு இடம் இருக்காத வகையில் இந்தியாவை ஒருங்கிணைத்து காத்து நிற்கும்…