சினிமா தியேட்டர்களால் சினிமா அழிகிறதா? சினிமாவால் தியேட்டர்கள் அழிகிறதா?

சினிமா தியேட்டர்களால் சினிமா அழிகிறதா? சினிமாவால் தியேட்டர்கள் அழிகிறதா?

ஒரு திரைப்படம் வெளியான 5 வது நாள் 800 பேர் உட்கார்ந்து பாக்கிற தியேட்டர்ல மொத்தமே (பால்கனி, ஃபஸ்ட் க்ளாஸ்) 84 பேர்தான் பாக்க வர்றாங்கன்னா தியேட்டர்களுக்கு எவ்வளவு நஷ்டம். ஏசி ஓடியாகனும். ஆட்கள் வேலை செய்யனும். எந்த படமும் இப்போ ஒரு வாரம் தாக்கு பிடிக்க மாட்டேங்குது.. போன வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆன தர்மதுரை படம் 5 ஆம் நாளான நேத்து காசி தியேட்டர்ல மேட்னி ஷோக்கு வந்தவங்க வெறும் 84 பேருதான்.

cine aug 25 a

ஆற அமர வாழை இலை போட்டு சாப்பாடு பறிமாறி ரசிச்சு ருசிச்சு சாப்பிடறதுக்கு பதிலா நின்னுகிட்டே அவசரம் அவசரமா பஃபே சாப்பிடறதும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்ல வெந்தும் வேகாம சாப்பி்ட்டு ஓடற மாதிரியும் இன்னைக்கு தியேட்டர்கள் நிலைமையும் ஆகிப்போச்சு. எல்லாம் ஃபாஸ்ட். படம் வந்தா அதிகபட்சம் 7 நாள். அதுக்குள்ள போட்ட காசை எடுக்கனும்..

ஒரு படத்தை ஒரே ஏரியாவில பல தியேட்டர்கள்ல ஒரே நாள்ல ரிலீஸ் பண்றதால இந்த நிலையா? இல்லே இப்ப வர்ற படங்கள் எல்லாம் உடனடியாக இணையதளத்தி லேயும், சிடிக்கள் மூலமாகவும் பாக்க முடியறதாலயா?

பல தியேட்டர்கள் இதன்காரணமா ஒரே தியேட்டரா இருந்ததை 4 ஸ்கிரீனா 6 ஸ்க்ரீனா கொண்டு வந்துட்டாங்க. சத்யம், கமலா போன்ற தியேட்டர்கள் இதுக்கு உதாரணம். ஆனா சென்னையில் தேவி, தேவி பாரடைஸ் போன்றவை எல்லாம் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே இருக்கு. இந்த தியேட்டர்கள்ல ஒரே நேரத்துல தேவியில் 838 பேரும் தேவிபாரடைஸ்ல 1037 பேரும் உட்கார்ந்து பாக்கலாம். சென்னையில் படம் பாக்கனும்னா அது தேவி அல்லது தேவி பாரடைஸ்ல பாக்கனும்னு சொல்றதுண்டு. ஏன்னா அந்த ஸ்க்ரீன்ஸ் அப்படி இருக்கும். 70 எம் எம்., சினிமாஸ்கோப் படங்கள் எல்லாம் இந்ததியேட்டர்கள்ல பாக்கும் போது பிரம்மாண்டமா இருக்கும்..

ஆனா இப்போ இந்த தியேட்டர்கள்ல இந்த சீட்டுகள் மொத்தமும் எப்போ ஃபுல் ஆகுதுன்னா படம் ரிலீஸ் ஆன ஒரு நாலைஞ்சு நாள் தான். அதுக்கப்புறமா கால்வாசி சீட்தான். இந்த தி‍யேட்டர்கள் எல்லாம் ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி வரை எந்த திரைப்படம் போட்டாலும் எல்லா காட்சிகளும் ஃபுல்லா தான் ஓடிகிட்டு இருந்துச்சு. அதுவும் ஒரு வாரம் ரெண்டு வாரமில்ல. 100 நாட்கள் ஓடிய தமிழ், இந்தி, ஆங்கிலப் படமெல்லாம் இருக்கு. காரணம் சென்னையில் அந்த தியேட்டர்ல ஓடற சினிமா பெரும்பாலும் வேற எங்கயும் ரிலீஸ் ஆகாது.. ஆனா இன்னைக்கு நிலைமை மோசமாப்போச்சு..

ஒரு படத்தை ஒரு ஏரியால இருக்கிற அத்தனை தியேட்டர்லயும் ரிலீஸ் பண்றாங்க. அதனால சீட்டுகளை குறைச்சு இப்போ ஸ்க்ரீன்களை அதிகப்படி யாக்கிட்டாங்க. ஆனா அந்த 1000 பேரோட உட்கார்ந்து படம் பாக்கற மாதிரி இப்போ இருக்கிற இந்த சின்ன தியேட்டர்கள்ல சந்தோஷம் இல்லே. தியேட்டர்கள் சின்னதுங்கிறதால என்னதான் கடைசி சீட்ல உட்கார்ந்து பாத்தாலும் காட்சிகள் எல்லாம் மிக அருகில் இருந்து பாக்கிற மாதிரி இருக்கு

இந்தமாதிரி நிறைய பேர் உட்கார்ந்து பாக்கிற தியேட்டர்கள் எல்லாம் மாத்தி ஸ்க்ரீன்கள் அதிகமாக்கனும்னா மிகப்பெரிய அளவில் செலவு பண்ணனும். சில தியேட்டர்களின் வடிவமைப்பு மாற்றக்கூடிய நிலையில் இல்லாமலும் இருக்கு.

உதாரணம் சென்னை காசி தியேட்டர். அவ்வளவு அழகா இருக்கும் இந்த தியேட்டரோட வடிவமைப்பு..மாத்தறது ரொம்ப கஷ்டம். இருக்கை கொள்ளளவு 800.. பத்து வருஷம் முன்னாடி வரை சத்யம் தியேட்டர் 3 தியேட்டரா தான் இருந்துச்சு. சத்யம், சாந்தம், சுபம் ன்னு மூனு ஸ்க்ரீன். ஆனா இப்போ அதை 7 ஆ மாத்திட்டாங்க.

இப்படியே போச்சுன்னா மாற்றியமைக்க முடியாத மிகப்பெரிய தியேட்டர்கள் எல்லாம் இழுத்து மூடவேண்டிய நிலை தான் ஏற்படும்.. ஏற்கனவே சஃபையர், ப்ளூடைமன்ட், எமரால்டு, ஆனந்த், லிட்டில் ஆனந்த் போன்ற பிரபலமான தியேட்டர்கள் அழிந்துபோய்விட்டன. வரலாற்றுச் சின்னங்கள் அழிந்து வருவது போல சென்னைக்கு அழகு சேர்த்து புகழ்பெற்ற தியேட்டர்களும் விரைவில் அழிந்து போகும் போல உள்ளது..

உதயகுமார்

error: Content is protected !!