September 21, 2021

கோடம்பாக்கம் என்ற புண்ணியஸ்தலத்தில் இருந்தாலே ஆசீர்வாதம்?

ரஜினிகாந்த் ,சிம்பு , லாரன்ஸ் , . பாலாஜி , நயன்தாரா , விஜய் , சிவகார்த்திகேயன் , சமுத்திரக்கனி கவுதமன் ,இப்படி நடிகர்கள் இயக்குனர்கள் என போராட்டத்தில் அக்கரையோடு அரிதாரம் பூசிகொண்டார்கள் .கோடம்பாக்கம் என்ற புண்ணியஸ்தலத்தில் இருந்தாலே ஆசீர்வாதம் தருகின்றவர்கள் என்று நம்மில் பலர் நம்புகின்னறனர் .இவர்கள் ஏதோ தமிழ்நட்டு மக்களுக்கு தியாகங்களும் , பணிகளும் ஆற்றியவர்கள் போல சிலிர்த்து கொள்கின்றனர் .

edit jan 25

நதிநீர் பிரச்னையில் 30 ஆண்டுகாலம் , சென்னைக்கும் டில்லி உச்சநீதிமன்றம் அழைந்து திரிந்து உத்தரவு வாங்கியவர்கள் . காவிரி , முல்லை பெரியாறு , என நீதிமன்றத்திற்கு சென்றவர்கள் . விவாசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை கோரி நீதிமன்றத்தின் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு வாங்கியவர்கள் . கம்பம் அருகே உள்ள கண்ணகி கோட்டம் தமிழ்நாடுக்கு சொந்தம் என்று போராடியவர்கள் .

கூடங்குளம் பிரச்சினைக்காக நீதிமன்றத்தை நாடியவர்கள் . வீரப்பன் வழக்கில் கைதாகி மைசூர் சிறையில் இருந்தவர்களை மீட்டவர்கள் .கொங்கு மண்டலத்தில் கெயில் ,தஞ்சை டெல்டாவில் மீத்தேன் என்ற பல தமிழக பிரச்சினைகளுக்கு எல்லாம் வீருகொண்டு குரல் கொடுத்த மாபெரும் கோலிவுட் மன்னர்கள் இவர்களை நாடு ஆராதிக்கின்றது . கேவலமாக இருக்கின்றது நாடு எங்கே செல்கிறது !

ரஜினிகாந்த் சம்மந்தமாக ஒரு வேதனையான ஒரு விடயத்தை சொல்ல வேண்டும் . ரஜினிகாந்த் நதிநீர் பிரச்னையை ஆதரிக்கின்றார் என்று உச்சநீதிமன்றத்தில் 30 ஆண்டுகள் போராடி கங்கை ,கிருஷ்ணா , காவிரி ,வைகை , தாமிரபரணி , நெய்யாறோடு தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று உத்தரவு பெற்றேன்.அந்த உத்தரவு நகலை என்னுடைய கடிதத்துடன் எந்த கோரிக்கையும் இல்லாமல் வெறும் தகவலுக்கு மட்டும் அவருக்கு அனுப்பி வைத்து இருந்தேன் . அந்த தீர்ப்பு நகலை கூட பிரித்து படித்து தீர்ப்பு நகல் கிடைத்து பதில். கடிதம் எழுதாத ரஜினி எப்படி இதயம் சுத்தியோடு நதிநீர் பிரச்சினையை ஆதரிப்பார் என்பது கேள்விகுறி ?

இதே தீர்ப்பு நகலை தலைவர் கலைஞரிடமும்,ஏ.பி.ஜே அப்துல் கலாமிடம் 2012ல் வழங்கியபோது தலைவர் கலைஞர் அவர்கள் இது பெரிய விசயம்யா!என்று சொல்லி நதிநீர் இணைப்பு குறித்து அவருடைய அறிக்கையில் என்னை குறிப்பிட்டு இருந்தார் .அப்துல் கலாமோ நீங்கள் நாட்டுக்குநல்லபணியைசெய்துள்ளீர்கள் என்று தட்டிக்கொடுத்தார் .இந்த பெருந்தன்மை ரஜினியிடம் இல்லையே அப்படியானால் வெற்று பேச்சுதானா ?.

அவர் நடித்த படையப்பா திரைப்படம் 1998ல் இரண்டு மூன்று நாட்களில் வெளிவரவேண்டிய இக்கட்டான சூழல் .அப்போது நான் திரைப்பட தணிக்கைத்துறை உறுப்பினர் .(censor bord member )சக உறுப்பினர் ஜெயா அருணாசலம் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு நீலாம்பரி பாத்திரமும் வசனமும் ஜெயலலிதாவை குறிப்பதாக இருக்கிறது . அந்த பகுதிகை நீக்க வேண்டும் என்று கூறினார் . நான் கடுமையான குரலில் ஆட்சேபித்தால் சென்சார் அதிகாரியும் அந்த காட்சிகள் நீக்க தேவையில்லை என்று கூறினார் அப்போது மிக பதட்டமாக இருந்த காலம் . இதை குறித்து தணிக்கை குழுவின் ஆவனங்களை பார்த்தாலே தெரியும் .இந்த செய்தி தினமலர் சென்னைபதிப்பில்வெளியாகிஇருந்தது .இதற்க்காக எனக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது .

இப்படிபட்டவர் நதிநீர் பிரச்சனையில் அக்கறை கொண்டவர்?எல்லாமே வேஷம்.தீதும்நன்றும்பிறர்தரவாரா ..மக்களுடைய அன்றாட வாழ்க்கையை திரைபடத்துறையே காப்பாற்றும் ! வாழ்க ஜனநாயகம் !!

கே. எஸ். ராதாகிருஷ்ணன்