September 29, 2022

சியான்கள் விமர்சனம்!

தமிழ் உள்ளிட்ட எல்லா மொழி சினிமாக்களிலும் விடலைக் காதல், பருவக் காதல், காமம், குரோதம், சிரிப்பு, வன்மம், துயரம், பாசம் என்று எத்தனையோ சப்ஜெக்டுகளில் படமெடுத்து இருக்கிறார்கள். ஆனால் கோலிவுட் வரலாற்றில் முழுக்க முழுக்க முதியோர் சிலரின் வாழ்வியலை சகலரும் புரியும்படி ‘சியான்கள்’ என்ற பெயரில் படமெடுத்து நெகிழ வைத்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் நம்மைச் சுற்றி நடமாடும் வயதான குழந்தை களே முதியோர்கள். பொதுவாக குழந்தைகளுக்கு எவ்வளவு ஆசை, எதிர்பார்ப்பு, பய உணர்வு இருக்குமோ அதே போன்ற மனநிலை வயதானவர்களுக்கும் இருக்கும். என்பதையெல்லாம் இதற்கு முன்னர் கூட சில படங்கள் கோடிட்டுக் காட்டி இருக்கிறது என்றாலும் இந்த சியான்கள் கொஞ்சம் ஆழமாக சொல்லி இருப்பது ஸ்பெஷல்தான்.

படத்தின் கதை என்னவென்றால் ஒரு பக்கா வில்லேஜில் வாழும் 7 இள மனசு கொண்ட தாத்தாக்கள்; இந்த தாத்தாக்களை ஊர் ஜனங்கள் ’சியான்’ – என்றே அழைக்கிறார்கள். அந்த சியான்களில் ஒருவர் மருமகள் கொடுமையால் சூசைட் செய்து கொள்கிறார். இன்னொரு சியானை சொத்து ஆசைப்பட்டு குடும்பத்தினர் கொன்று விடுகிறார்கள். இதை எல்லாம் தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாத மிச்ச சியான்களில் ஒருவருக்கு ஏரோப்ளேனில் பறக்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையை நிறைவேற்ற ஐந்து சியான்கள் மெனக்கெடுகிறார்கள். அந்த சூழலில், ஏரோப்ளேனில் பறக்க ஆசைப்படுகிற சியான் ஒரு விபத்தில் சிக்கி விட. அவரைக் காப்பாற்றி ஏரோப்பிளேனில் பறக்க வைக்க  சக சீயான்களின் படும் அவஸ்தைதான் முழுப் படம். இந்த ஏழு வரியில் சொன்ன சியான்கள் கதைக்கு இந்த டீம் வழங்கும் திரைக் கதையால் மனசு வலிக்கும் என்பதே நிஜம்.

இதில் பெரிசு எனப்படும் சியான்களாக நடித்திருக்கும் நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாக ராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயண சாமி ஆகிய 7பேரும் அதகளப் படுத்துகிறார்கள். அதிலும் சாமிக்கு நேர்ந்த ஆடை ஆட்டையப் போடுவதில் தொடங்கி , கண்ணில் படும் பெண்களை எல்லாம் கமெண்ட் அடிக்கும் போக்கு எல்லாம் கேஷூவலாகவும் நம்பும்படியுமாக இருக்கிறது.

சியான் படத்தின் தயாரிப்பாளரான கரிகாலன்-இந்த படத்தின் தனக்கு கிடைத்த கேரக்டரை முக்கிய ரோலாக கருத வைக்கும் அளவுக்கு கச்சிதமாக செய்து சபாஷ் சொல்ல வைக்கிறார். நாயகி ரிஷா-வுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த முயன்றிருக்கிறார்

இசை, எடிட்டிங் எல்லாம் பக்கா. அதிலும் சியான் சியான்’ மற்றும் ‘ஒட்டி ஒட்டி நானும் வரேன்’பாடல்கள் படம் முடிந்த பின்னரும் முணுமுணுக்க வைக்கிறது.

பொழுது போக்கு சாதனம் என்று சொல்லப்படும் இது போன்ற சினிமா-வில் வாழ்க்கையில் ஒரு ஆசையாவது வைத்துக்கொள்ளுங்கள் அது உங்கள் ஆயுளை நீட்டித்து தரும் என்ற மெசெஜ் தொடங்கி முதியோர் என்பவர் ஒதுக்கப்பட வேண்டியவர் அல்லவே  அல்ல என்பதை அழுத்தமாகச் சொல்வதில் பாஸ் மார்க்-க்கும் மேலாகவே மதிப்பெண்கள் வாங்கி இருக்கிறார்கள்

மொத்தத்தின் இந்த சியான்கள் – ஃபேமிலியோடு தியேட்டருக்கு போபார்க்கத் தகுந்த படப் பட்டியலில் சேர்ந்திருக்கிறதாக்கும்

மார்க் 3 / 5