சின்ன அண்ணாமலையை உஙளுக்கு தெரியுமா?…ரியாதா? தெரிந்திருக்க வேண்டுமே. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவருக்காக இருபதாயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து அவர் அடைக்கப் பட்டிருந்த திருவாடனை சப் ஜெயிலை உடைத்து அவரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். இப்போது அல்ல 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது.கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களின் உறவினர். தேவகோட்டை வாசி. நல்ல தமிழ் அன்பர். சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் நெருங்கிய தோழர். ராஜாஜியின் தொண்டர், ‘சிறிய திருவடி’ என்று அன்போடு அழைக்கப் பட்டவர். தமிழ்ப் பண்ணை எனும் புத்தக வெளியீட்டகம் நடத்தியவர். தமிழரசுக் கழகத்திற்காக “சங்கப் பலகை” எனும் பத்திரிகை நடத்தியவர். கம்பீரமான தோற்றம். சிறந்த பேச்சாளர். நகைச்சுவை உணர்வு அதிகம்.

தேசியச் செல்வர், தியாகத் செம்மல், தமிழ்த் தொண்டர் என்றெல்லாம் அழைக்கபட்ட சின்ன அண்ணாமலை, 1920ம் ஆண்டு ஜூன் மாதம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிறந்தவர். தான் வாழ்ந்த அறுபது ஆண்டுகளில் 50 ஆண்டுகளை நாட்டிற்காக அர்ப்பணம் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் குன்றக்குடியில் 1930ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் ஊர்வ லத்தில், பெருந்தலைவர் காமராசர் அவர்களிடம் மூவர்ணக்கொடி பெற்று கலந்து கொண்டார். 1936ல் கமலா நேரு அம்மையார் அமரரானதை முன்னிட்டு தேவ கோட்டையில் நடை பெற்ற நகரத்தாரல் உயர்நிலைப் பள்ளியில் ஸ்டிரைக் செய்ததற்காக, எஸ்.எஸ்.எல்.சி., பரீட்சை எழுத முடியாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரது மனதை மாற்ற எண்ணிய அவரது தந்தை, அவரை மலேசியாவிற்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்றவர் தேசியவாதிகளை ஒன்று சேர்த்து இந்தியன் அசோஷியேஷன் என்ற சங்கத்தை அமைத்தார். அங்கு, இவர் செய்த மதுவிலக்கு பிரசாரத்தை கேட்ட ரப்பர் எஸ்டேட் பெண்கள் சிலர் கள்ளுக்கடைகளுக்கு தீ வைத்தனர். அதற்காக கைது செய்யப்பட்டு பின் நாடு கடத்தப்பட்டார். அதனால், மீண்டும் இந்தியாவிற்கு வந்தார்.

அப்போது காந்தியடிகள் இரண்டாவது யுத்த எதிர்ப்பு பிரசாரம் செய்ய தனிப்பட்ட சத்யாகிரகம் துவக்கினார். இவர், சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் யுத்த எதிர்ப்பு பிரசாரம் செய்யும் போது, கைது செய்யப்பட்டு, ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். 1941ல் தமிழிசை மாநாடு ஒன்றை நடத்தி, தமிழிசைப் பள்ளி ஒன்றை நிறுவினார். அப்பள்ளி இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பின், தமிழ்ப்பண்ணை என்ற புத்தகப் பதிப்பகத்தைத் துவக்கினார்.

1942ல் நடந்த ஆகஸ்டு புரட்சியில் தன்னை அர்ப்பணித்து, நாடு, நகரெல்லாம் சுற்றினார். அதனால், அரசாங்கம் இவரை கைது செய்தது. இதைக் கண்டு கொதித்தெழுந்த தேவகோட்டை மக்கள், இவரை கொண்டு சென்ற பஸ்சை தீ வைத்து கொளுத்தினர். பின் கோர்ட்டுக்கும் தீ வைத்தனர். அதில், அரசாங்கத்தால் 65 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை காரணம் காட்டி, இவருக்கு நாலரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் ராஜாஜி ஆஜராகி எதிர்ப்பான கேசை உடைத்து ஆறு மாதத்தில் விடுதலை செய்ய வைத்தார். பின் ராஜாஜி ஆலோசனைப்படி சென்னைக்கு வந்தார். சென்னை தியாகராய நகரில் தமிழ்ப்பண்ணை என்ற புத்தகாலயத்தை துவக்கினார். அது, தேசபக்தர்களின் பாசறையாக இயங்கியது.

சின்ன அண்ணாமலை என்ற பெயரை இவருக்கு சூட்டி ராஜாஜி அழகு பார்த்தார். இவர், ” பூட்டை உடையுங்கள்’, “அன்ன விசாரம்’, “ஜப்பான் வருவானா அமெரிக்க வைப்பார்’ என்ற புத்தகங்களை வெளியிட்டதற்காக ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திரத்திற்கு பிறகு தமிழையே தமிழ்நாட்டிற்கு ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று ம.பொ.சி. நடத்திய கிளர்ச்சிக்கு மூல பலமாக இருந்தார்.

இளைஞர்களை காங்கிரசில் இழுப்பதற்காக 1969ல் அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தை துவக்கினார். ஏழு ஆண்டுகள் பல பேரவைகளை நடத்தி காங்கிரஸ் இயக்கத்திற்கு வலுவூட்டினார். இவருடைய தமிழ்ப்பண்ணையிலிருந்து தான் சென்னையில் பல பதிப்பகங்கள் உருவாகின. எனவே, இவரை பதிப்பகங்களின் தந்தை என்றும் சொல்லலாம்.

“ஐந்து லட்சம்’, “கடவுளின் குழந்தை’, “தங்க மலை ரகசியம்’ போன்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டார். தேச விடுதலை, காங்கிரஸ் கட்சி, பத்திரிகைத் துறை, திரைப்படத்துறை என பலவற்றிலும் பங்காற்றிய இவர், தனது பிறந்த நாளான இதே ஜூன் 18ம் தேதி, 1980ம் வருடம் உயிர் நீத்தார். அவர் மறைந்தாலும், அவருடைய நினைவுகள் வாழ்கின்றன.

aanthai

Recent Posts

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பு : இந்தியா, சீனா புறக்கணிப்பு!

உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா புறக்கணித்துள்ளது.…

1 hour ago

பொன்னியின் செல்வன் – விமர்சனம்!

முன்னொரு காலக்கட்டத்தில் - அதாவது ஊமைப் படங்கள் உருவான காலத்திலும் சரி, பேசும் படமாக அது வளர்ச்சி அடைந்த சூழலிலும்…

1 day ago

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும்!

கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரெப்போ விகிதம்…

1 day ago

சமந்தா & தேவ் மோகன் நடிப்பில் தயாரான ‘ஷாகுந்தலம்’, 3 டி – யில் ரிலீஸ்!

உலகப்புகழ் பெற்ற காளிதாசின்  'அபிஞான ஷாகுந்தலம்' எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்படும்  'ஷாகுந்தலம்' மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 days ago

“’ஆதார்’ படத்தின் உள்ளடக்கம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படக்கூடியத் தகுதி கொண்டது!

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி…

2 days ago

This website uses cookies.