March 22, 2023

சீனாவின் போர் தந்திரங்களும், இந்தியாவின் மாறுபட்ட யுக்திகளும்!

சீனாவின் J10 என்பது இஸ்ரேலிடம் இருந்து 1980 ல் பெற்ற ப்ளு பிரிண்ட் மூலம் வடிவமைக்கப்பட்டது. அது ரஷ்யாவின் விமானங்களின் கலவை கொண்டு அது சொந்த தயாரிப்பு என்பது போல காட்டப்பட்டது. 1980 ல் ஒரு விமானத்தின் ப்ளூ பிரிண்டை இஸ்ரேல் சீனாவிற்கு கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பழையதாக இருந்திருக்கும் என்று பாருங்கள். பொதுவாக போர் விமானங்கள் என்பது எதிரியின் எல்லைக்குள் சென்று தாக்கும் Attacker, Interceptor வகை விமானங்கள். Attacker வகையிலும் நிலம், வான், நீர் என்று அந்த யுக்திகள் வேறுபடும். இதில் மிக நுக்கியமான சில அம்சங்கள் நீண்ட தூரம் செல்லும் அளவிற்கு எதிர்பொருள் நிரப்ப வேண்டும். அதுவும் மிக வேகமாக பறக்க வேண்டும், நிறைய ஆயுதங்களை சுமந்து செல்ல வேண்டும். அதில் தற்காப்பு ஆயுதங்களும் அடங்கும். அதே சமயம் எதிரி நாட்டு விமானங்களில் ரேடார்களில் படாமல் இருக்க வேண்டும். அந்த வகை விமானங்களைத்தான் ஐந்தாம் தலைமுறைவிமானஙகள் என்றும் Stealth வகை விமானங்கள் என்கிறாரர்கள்.

இந்த தேவைக்காக சீனா உருவாக்கிய விமானம் Chengudu J20 என்ற பவர்ஃபுல் விமானம், Stealth வகை, உலகிலேயே மிக வேகமான விமானம் என்று சொன்னது. ஆனால் அதை இந்திய ரேடார்கள் எளிதாக கண்டுகொண்டுள்ளது. அதுவும் 120 கிமீ முன்பாகவே என்பதுதான் விஷேசம். சீனா தனது பொருளின் தரத்தை மிக உயர்த்தி பொய் சொல்லி விற்க பார்க்கிறது. ஆனால அதை சோதித்து பார்க்க அனுமதிப்பதில்லை. ஆனால் இந்தியாவோ அதை அனுமதிப்பது மட்டுமல்ல, அதன் மூலம் கிடைகிற அனுபவங்களை தன் தர மேம்பாட்டுக்கு பயன்படுத்துகிறது. அதனால்தான் அதன் J10 விமானங்களை Rafale விமானங்களை உயர்ந்தது என்று சொல்லியும், 31 மில்லியின் டாலருக்கு கூட வாங்க நாடுகள் முன்வரவில்லை. அதற்கு பதிலாக இந்தியாவின் Tejas விமானங்களை 41 மில்லியன் டாலர் கொடுத்து வாங்க நாடுகள் முன்வருவதில் இருந்து அதன் தரம்பற்றி மட்டுமல்ல, சீனாவின் பொருட்களின் மீதான நம்பிக்கை மோசமானது என்பது புரியும்.

அடுத்து Interceptor எனும் வகை, அது எதிரி நாட்டு விமானங்கள் எனும் வகை விமானம். இந்த வகை விமானங்கள் எதிரி நாட்டு விமானங்களை தன்னிடம் இருக்கும் விமானங்களின் ரேடார் சிஸ்டம் மூலம் அறிந்து, அதை தங்களிடம் இருக்கும் ராக்கெட்டுகள் மூலம் தாக்கி அழிக்க வல்லது. இதில் சில காரணிகள் முக்கியமானது. வேகமாக செல்லும் Attacker விமானங்களுக்கு இணையான வேகம் கொண்டதாக இருக்க வேண்டும். அடுத்து அதனிடம் இருக்கும் ஏவுகணைகள் உயர்ந்த தரமும் நீண்ட தூரம் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். ஏனெனில் விமானங்களை ஓட்டுவது பைலட்கள், அவர்கள் திசையை எளிதாக மாற்றி ஏவுகணையை நெருங்க விடாமல் செய்ய முடியும். அதற்குள் அதன் எரிபொருள் தீர்ந்துவிட்டால் அது வீழ்ந்துவிடும்.

பெரும்பாலும் விமானங்களில் இருக்கும் ராக்கெட்டுகள் 60 மைல் தூரத்திற்கு குறைவனதாகவே இருக்கும். அப்படியிருக்க ராக்கெட்டுகளை விட Interceotor விமானங்கள் மூலம் தாக்கி அழிப்பது எளிது. நம் பறக்கும் சவப்பெட்டி என்று சொல்லப்பட்ட மிக் 21 விமானத்தில்தான் அமெரிக்காவின் பலமான F16 விமானத்தை அபிநந்தன் Mig 21 ஐ கொண்டு வீழ்தினார் என்பதை நினவில் கொள்ளுங்கள். அது மிகப்பெரிய சாதனை மட்டுமல்ல, அது அமெரிக்காவிற்கு பெரும் அவமானத்தை தந்துவிட்டது. அதனால்தான் அமெரிக்கா பாகிஸ்தானை தண்டித்தது.

இதற்கு மாற்று என்ன?

தரையில் இருந்து தாக்கும் மிஸைல்கள். இது வெகு வேகமாகவும், வெகுதூரமும் பறக்கக்கூடியது. சீனாவின் J20 என்பது உண்மையில் 3.5 Mach speed கூட பறக்குமா என்பது சந்தேகம். ஆனால் நம்மிடம் இருக்கும் ஏவுகணைகள் 6 Mach speed க்கு அதிகமானது. எனும்போது அது நம் எல்லையை நோக்கி வந்தால் எளிதாக வீழ்த்திவிட முடியும்.

அதனால்தான் இந்தியா Strategical ஆக ஏவுகனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இன்று உலகில் உள்ள மிகச்சிறந்த ஏவுகணைகளில் முதல் பத்து இடங்களில், முதல் இரண்டு, ஆறாவது ஏவுகணையும் இந்தியாவுடையது என்பதன் மூலம் நம் சக்தி தெரியும். அது மட்டுமில்லாம், நம் Tejas வகை விமானங்கள் சீனாவின் மிமானத்தை விட பலம் வாந்தது. அதுவும் நம் நோக்கம் நம்மை பாதுகாத்து கொள்வது எனும்போது இந்த வகை விமானங்கள் பெரிதும் உதவும். அதுவும் நமது Tejas MK2 என்று பாதுகாப்பு வகையில் J20 விமானங்களை வீழ்த்தக்கூடியது. Tejas MK1 வகை விமானமே நம்மிடம் இருக்கும் உயர் ரக விமானங்களோடு DigFight மூலம் நீருபிக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல 4.5 Stealth rating கொண்டது, நீண்ட தூரம் பறந்து சேஸ் செய்ய முடியும்.

சரி, போர் என்று வந்துவிட்டால் நாம் நம்மை பாதுகாத்துக்கொண்டு இருந்து என்ன பயன் என்பது நியாயமான கேள்வியே. நம்மிடம் இருக்கும் ஏவுகணைகள் சீனாவின் எந்த மூலையயும் தாக்கக்கூடியது. அதுவும் அதன் மிக உயரிய வேகத்தால் அதை தடுத்தழிக்க கிட்டத்தட்ட முடியாது என்றே சொல்லலாம். அது மட்டுமல்ல ஒரு ஏவுணையில் பல இலக்குகளை தாக்கும் திறன் நம்மிடம் இருப்பது என்பது மிக விஷேசமானது. எனவே அதன் மூலம், செலவு குறைவாக தாக்கும் திறன்கொண்ட விமான நிலையங்கள், ஏவுகணை தளங்கள், போர் தளவாட கிடங்குகள், விமானந்தாங்கி கப்பல்கள் என்று பலவற்றை குறைந்த செலவில் செய்துவிட முடியும். அதானல்தான் வான் பாதுகாப்பில் நம் போர் யுக்தி வேறுபடுகிறது. அதாவது Interceptor விமானங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் தந்திரத்துடன் நாம் முன்னேறுகிறோம். ஏனெனில் நம் நோக்கம் அடுத்த நாடுகளை ஆக்கிரமிப்பது அல்ல, இழந்த நம் பகுதியை மீட்பதே அதிகபட்சம்.

நம் முதல் விமானதாங்கி கப்பல் உற்பத்தி செய்த நிலையில் இரண்டவது அதைவிட பெரிய விமானம்தாங்கி கப்பலை உருவாக்க 2000 ஆண்டிலேயே செயல் அளவில் ஒப்புதல் அழித்தும், அதற்கான பணி இன்னும் முழு மூச்சாக தொடங்கவில்லை. ஏனெனில் அது போன்ற போர்கப்பல்கள் பலமான ஏவுகணைகள் மூலம் அழிக்க முடியும் என்பதும், தாக்கும் விமானத்தின் தேவைகள் குறைந்து விட்டது என்பதால் அது தாமதமாகிறது. மேலும் விமானந்தாங்கி கப்பல்களுக்கு பாதுகாப்பு கொடுக்க அட்டாக்கர் வகை போர் கப்பல்களும், நீர்முழ்கி கப்பல்களும் அதன்னுடன் பாதுகாப்பிற்கு எப்போதும் செல்ல வேண்டும் என்பதால் அதற்கான செலவுகள் அதிகம். எனவே அதற்கு பதிலாக சிறிய போர் கப்பல்களை எவுகனைகளை தாங்கி செல்லும் வகை கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் உற்பத்தி மீது இந்தியா கவனம் செலுத்துகிறது.

ஆம் நம் நோக்கம் சீனாவை போல வல்லரசு என்று மற்றவர்களை மிரட்டி அதை ஆக்கிரமிப்பது அல்ல, ஆனால் அந்த வல்லரசுகளே தாக்கினாலும் நம்மால் தடுக்கும் வல்லமை நமக்கு இருக்க வேண்டும் என்பதே. அதை நோக்கியே நாம் பயணிக்கிறோம்!
ஆனாலும் நம் அடுத்த விமானந்தாக்கி கப்பல் பணி தொடரும், ஏனெனில் அதன் மூலம் புதிய தொழில் நுட்பங்களும், வேலை வாய்ப்புகளும் பெருகும். அது நாட்டின் தொழில் துறையை மேம்படுத்தும். இதில் ஏதாவது தவற விட்டிருந்தால் கமண்ட் செய்யுங்கள். பதிலளிக்கிறேன். நம் நோக்கம், நாட்டின் வளர்ச்சியை புரிந்து கொள்ள தேவையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதும், சிந்திக்க தூண்டுவதுமே. இது ஒரு உபிஸுக்கு தேவை இல்லாத விஷயம், ஆனால் சங்கிகளுக்கு மிக அவசியம்.

மரு. தெய்வசிகாமணி