September 18, 2021

China’s CHECKMATE to Indiaவும், Let’s Take Selfie புள்ள மோடியும்..!

இந்தியாவின் முக்கால்வாசி சாபம் அரசியல்வாதி என்றால் மீதி கால் வாசி – நான் நல்லா படிச்சி இந்த ஜில்லாவுக்கே கலெக்டராகி சேவை செய்வேன்னு சொன்ன டுபாக்கூர் ஐ ஏ எஸ் அதிகாரிகள் தான். இந்த அஞ்சு வருஷ படிக்காத அரசியல்வாதிகளுக்கு அஞ்சு வருஷத்தில அஞ்சு ஜென்மத்துக்கு சொத்து சேர்த்து வைக்க டெக்னிக்கலாய் தான் மக் அப் பண்ணி பாசான திறமையை காட்டும் இவர்களுக்கும் மாமா பையன்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
ravi may 17
நேர்மையான அதிகாரின்னு கேள்வி வரும்போதெல்லாம் சகாயம் அப்புறம்ம்-ன்னு தேடுவது எத்தகைய கேவலம் என்பது அந்த ஐ ஏ எஸ் படித்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. போன கோடை விடுமுறைக்கு வந்த போது திருநெல்வேலியில் நடந்த கொடுமைகளை கேட்ட போதும் – புகாராக கொடுத்த போதும் கொஞ்சமும் அசராமல் தான் ஒரு கலெக்டர் என்று மிதப்புடன் இருந்த கலெக்டரை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி எண்ணி 3 மாசத்தில் இட மாற்றமும் சர்வீஸ் ரெக்கார்ட்டில் ஒரு புள்ளி வைத்த பெருமை என்னையே சேரும்
ஆனாலும் ஒவ்வொரு கலெக்டரையும் அரசு அதிகாரியும் செய்ய இந்த நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி……………அப்படி சாமான்யனுக்கே இந்த கதி என்றால் ஆசியாவின் பெரிய சக்தியான இந்தியாவுக்கு தலைக்குனிவை தேடி தந்ததும் இந்த அதிகாரிகள் தான் – போன வாரம் 99% இருட்டடிக்கபட்ட இந்திய – சைனா அரசின் விஷயத்தை தான் இன்று காணப்போகிறோம்…………..

அரசு முறை பயணமாக சைனாவுக்கு செல்ல தயாராகிறார் இந்திய பிரதமர் மோடி – அதற்கான அத்தனை விஷயங்களையும் தயார் செய்த நிலையில் கிளம்ப ரெண்டு நாளுக்கு முன் பேரிடியாக ஒரு விஷயத்தை செய்கிறது சைனா – அதாவது பல மாமாங்கமாக பிரச்சினையை கொண்ட காஷ்மீர் ஒரு பகுதி இந்தியாவுக்கும் இன்னொரு பகுதி பாகிஸ்தானும் வைத்திருக்கும் Pak occupied Kashmir என்னும் ஜோனில் 46 பில்லியன் முதலீட்டை இந்த பதட்டமான இடத்தில் அறிவிக்கிறது.

என்னடா இது சோதனை இது பிரதமர் பயணத்தை பாதிக்கும் செயல் என்று அதிகாரிகள் கடைசி நேரத்தில் நெளிய சம்மன் செய்து டெல்லிக்கான சீன துதரை அழைக்கிறது. இந்த நல்லெண்ண பயண நேரத்தில் இது தேவையா என கேட்க? அப்போது தான் தெரிய வருகிறது உண்மை நிலை. வெகு நாளாக சைனாவும் ஜப்பானும் மோதி கொள்ளும் விஷயம் சில கடல் எல்லை மற்றூம் சிறு சிறு தீவுகள் சைனா தனக்கு சொந்தம் என கூற இல்லை எங்களுக்கே சொந்தம் என ஜப்பான் அடித்து கூற – ஜாயின்ட் எக்ஸர்சைஸ் என்னும் கூட்டு பயிற்சியை அமெரிக்கா பல பேஸ்களில் செய்ய அப்படி ஒரு கூட்டு பயிற்சி ஜப்பான் – இந்தியா – அமெரிக்கா மூன்று சேர்ந்து சர்ச்சைக்கான தீவு பகுதிகளில் நடத்துகிறது.

இதை இந்த நேரத்தை விட ஒரு பெஸ்ட் நேரம் இந்தியாவுக்கு உணர்த்த நேரமில்லை என்று தான் சைனா வைத்த செக்மேட்டில் இந்தியா ஒன்றுமே செய்ய முடியாமல் பானபத்திர ஓனான்டி போல இரவோடு இரவாக கூட்டு பயிற்சியில் இருந்து விலக சைனாவும் தன் நிலையை மாற்றூ சிவப்பு கம்பளத்தை விரித்து மோடிக்காக காத்திருக்க செய்த இந்த மொத்த கடைசி நேர கசமுசாவை தவிர்த்து மீசையில் மண் ஒட்டினதை தவிர்த்து இருக்கலாம் இந்த பாழாய் போன அதிகாரிகள் நினைத்திருந்தால் என்பதே உண்மை – பல மீடியா இதை பிளாகவுட் செய்ய சொல்லி அறிவுறுத்தி இருந்தாலும் உண்மை நிலையை ஒரு பேப்பர் கூட வெளிடவில்லை என்பது கேவலம்…

இந்த மாதிரி ஜன நாயகம் என்ற அழுக்கு கம்பிளி போர்த்தி காப்பதை விட ஒரே கட்சி ஒரே ஆட்சி என்னும் சீன சர்வாதிகாரமே மேல் – ஏன்னா அங்க தான் அதிகாரினாலும் – அமைச்சர் ஆனாலும் 3 மாசத்தில ஊழல் செஞ்சா தூக்கு தண்டனை வரை கரெக்ட்டாய் கிடைக்கும் நாடு என்பதால் – நல்லபடியாய் இந்த ஞாயிற்றை அனுபவியுங்கள்……!

Sunday Thathupithu – இன்று சன்டே என்பதால் இன்றைய தத்துபித்து