November 29, 2021

சீனாவின் புதிய டிஜிட்டல் கரன்சி!

“திடீர் சீன முடிவு முழு உலகின் மூலைகளையும் உலுக்கியது” என்பன போன்ற பிரேக்கிங் செய்திகளை நேற்று உலகம் முழுதும் ஊடகங்கள், ஏதோ சீனா புரட்சி செய்து விட்டது போல செய்தியைப் பரப்பினார்கள். கடைசியில் பார்த்தால் ஈ-கரன்சிதான். அரசு தன் சார்பாக வெளியிட்டுள்ளது. இதை இந்தியா செய்து மூன்று வருடங்களாகி விட்டது. யூபிஐ மற்றும் பீம் வகையைச் சார்ந்ததே சீனாவின் இந்த ஈ-யுவான்.

ஆனால் உண்மையில் ஆச்சர்யப் பட வேண்டிய செய்தி, சீனா பங்கு பரிவர்த்தனைகளில் டாலர் பெக்கை ரத்து செய்ய முடிவு செய்து, டாலருக்கு பதிலாக சீன யுவானுடனான அதிகாரப் பூர்வ இணைப்பை செய்ய முடிவு செய்ததே. இது சீனாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு தைரியமான மற்றும் முக்கியமான படியாகும்.

இதன் பொருள், டாலர் இனி சீன வர்த்தகத்தில் இருக்காது. அமெரிக்க டாலர், சீன யுவானுக்கு எதிராக வலுவாக வீழ்ச்சியடையும், மற்றும் உலக சந்தைகளில் அது பாதிக்கலாம், என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் உலக சந்தையும் இந்த முடிவால் திகைத்துப் போயின என்பது ஒரு உண்மையே. இந்த செய்தி இன்று பிபிசி உலக ஆங்கில பிற்பகல் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்கொண்டு அமெரிக்கா திட்டமிடாமல் செயல்பட்டால் எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டு பொருளாதாரப போருக்கு உலகை இட்டுச்செல்லக்கூடிய யுத்தம் இது !

சீனா 2021 உலகத்தை வழிநடத்தும் என சீனா தனக்குத்தானே கணித்துக் கொண்டுள்ளது. .இது சீனாவின் பழைய கனவு, மற்றும் பல ஆண்டுகளாக இதற்கான வழி வகையை தேடிக் கொண்டும் இருந்தது.

அமெரிக்காவுடன் சண்டையிடுவதற்கு சீனா வெளியிட்டுள்ள தனி டிஜிட்டல் பணம் e-RMB.

இது ஒரு பெரிய பொருளாதாரத்தால் இயக்கப்படும் முதல் டிஜிட்டல் நாணயமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு நாட்டின் நாணய மதிப்பு அந்த நாட்டின் வளங்கள், ஜிடிபி, மக்கள் தொகை அடிப்படையில் இருக்கும்.

அதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று கனிம வளங்கள் அடிப்படையில். இதற்கான உதாரணம் குவைத், ஓமான், சவுதி அரேபியா!. வளங்களை விற்று காசுக்கான மதிப்பை உயர்த்தும். இந்த வகையில் க்ரூட் ஆயில் நிறைந்த குவைத் தினார்தான் உலகில் அதிகமான மதிப்புள்ள பணம். ஒரு தினாருக்கு ஏறக்குறைய 3-3/4 டாலர்கள்.

அதே நேரம் மனித வளங்கள் அடிப்படையில் கரன்சி மதிப்பும் இருக்கும். உதாரணம் சிங்கப்பூர்… இதன் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எந்த வகையிலும் குறைந்த்தல்ல!

சீனாவின் புதிய ஈ-கரன்சி போலவே, பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள அலிபாபாவின் அலிபே நடப்பில் உள்ளது. ஆகவே ஈ-கரன்சி சீனாவிற்கு புதியதல்ல என்றாலும், அரசே இதை செயல்படுத்தி உள்ளதால் பின்புறம் உள்ள ராஜரகசியம் கசிய சில நாட்கள் ஆகலாம்.

“புதிய டிஜிட்டல் நாணய இறையாண்மை, டாலர் settlement முறைக்கு மாற்று செயல்பாடு வழங்குகிறது. ஆனால் ஒரு நாடு மற்றும் நிறுவன மட்டத்தில் எந்தவொரு தடைகள் அல்லது விலக்கு அச்சுறுத்தல்களின் தாக்கத்தையும் மழுங்கடிக்கிறது”என்று கடந்த வார சீனா டெய்லி அறிக்கை கூறியது.

சில அரசு ஊழியர்கள் மற்றும் அரசு முதலீட்டு நிறுவனங்கள் இனி தங்கள் சம்பளத்தை டிஜிட்டல் நாணயத்தில் மே முதல் பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கட்டண தளங்களின் பிரபலமடைந்து வருவதற்கும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்கள் உடல் தொடர்பைத் தவிர்ப்பதற்கும், ரொக்கப் பணப் பயன்பாட்டில் சரிவு ஏற்படுத்தவும் இந்த ஈ-கரன்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அரசியல் ரீதியாக, ஏனைய நாடுகளை குறி வைத்து பொருளாதார சீர்குலைவு எனும் அபாய நோக்கத்துடன், உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் நாணய சந்தைகளை ஒருங்கிணைப்பதற்கு உதவக்கூடும். குறிப்பாக, அமெரிக்காவின் எதிரி நாடுகளை ஒன்றிணைக்கும் ஒரு நாணயமாக இது திகழக் கூடும்.

சோதனை அடிப்படையில் செய்யப்படும் நகரங்களில் ஒன்றான சுஜோவில் உள்ள ஒரு பூ சந்தையில் மக்கள் ஷாப்பிங் ஈ-யுவானில் செய்கிறார்கள். இது சிறிய அளவிலான வர்த்தம் என்றாலும் மக்களின் ஈடுபாட்டைக் கணிக்க உதவும்….

சீன அரசு நடத்தும் டிஜிட்டல் ஈ-ஆர்.எம்.பி நாணயத்தின் முக்கிய சோதனையை சீனாவில் பல நகரங்களில் பண அமைப்புகள், மற்றும் வங்கிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது

அடுத்த வாரம் முதல் சீனா தனது புதிய டிஜிட்டல் நாணயத்தில் நான்கு முக்கிய நகரங்களில் பணம் செலுத்துவதைத் தொடங்கும் என்று உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய மாதங்களில், சீனாவின் மத்திய வங்கி ஈ-ஆர்எம்பியின் வளர்ச்சியை முடுக்கிவிட்டுள்ளது, இது பின்புலத்தில் ஒரு மிகப் பெரிய பொருளாதாரத்தால் இயக்கப்படும் முதல் டிஜிட்டல் நாணயமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஷென்சென், சுஜோ, செங்டு உட்பட பல நகரங்களில் சோதனைகளைத் தொடங்கியுள்ளது. அத்துடன் பெய்ஜிங்கிற்கு தெற்கே ஒரு புதிய பகுதி, சியோங், மற்றும் 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கிற்கான சில நிகழ்வுகளை நடத்தும் பகுதிகள் என மேலும் சில இடங்களில் சோதனை நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது.

சீனாவில் போக்குவரத்துக்கு மானியம் வழங்க இந்த நாணயம் பயன்படுத்தப்படும் என்று சீனா நியூஸ் கூறியது, ஆனால் சியோங்கில் சோதனை முதன்மையாக உணவு மற்றும் சில்லறை விற்பனையில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத் தக்கது. எனெனில் 150 கோடி மக்களை இந்த நாணயத்தைப் பயன்படுத்த சில்லறை விற்பனையே பெருமளவு உதவும் என்பது சீனாவின் கருத்து.

சில அறிக்கைகள் மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட வணிகங்கள் சோதனையின் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக் கொண்டதாகக் கூறுகின்றன, இருப்பினும் ஒரு அறிக்கையில் ஸ்டார்பக்ஸ் தான் ஒரு பங்கேற்பாளர் அல்ல என்று கூறியுள்ளதை அமெரிக்கக் கருத்தாகவும் எதிர்ப்பாகவும் பார்க்கப் படுகிறது.

உபயோகிப்பாளர் கண்ணோட்டத்தில், மத்திய வங்கி மேற்பார்வையின் கண்ணோட்டத்தில், எதிர்கால நிதி வடிவங்கள், கட்டணம், வணிகம் மற்றும் சமூக நிர்வாகம் போன்றவற்றிலிருந்து சிறிய மாற்றங்கள் இருந்தாலும், இதுவே மிகப்பெரிய விஷயம் எனவும் சீனா கருதுகிறது.

டாலர் பெக்கை உடைப்பது என்பது ஒரு தைரியமான முடிவு. இருப்பினும் திரும்பிப் பார்க்கும் போது, ​​டாலர் யூரோவிலிருந்து பிரிக்கப்படாதபோது, ​​ஈரோ நாணய மதிப்பு டாலரின் 150% ஆக இருந்தது, ஆனால் மெதுவாகக் குறைந்து இப்போது டாலருக்கு இணையாக உள்ளது.

சீனாவிற்கான அந்நிய நேரடி முதலீடு டாலர்கள் வழியாக இல்லாதபோது இது கடினமாக இருக்கும். பிற நாட்டு நாணயங்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றின் கன்வெர்ஷன் மதிப்புகளை நிர்ணயிக்கும் போது சீனா அவஸ்தைப் படப் போகிறது.

அனைத்து சீன வளங்களும் அவற்றின் நாணயம் மற்றும் வணிக ஏற்றுமதியுடன் இணைக்கப் பட்டுள்ளதால், இ-யுவான் குவைத் தினார் போன்ற வலுவான தளத்தைக் கொண்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நிச்சயமாக அமெரிக்காவிற்கு ஒரு அடி. ஆனால் யுவான் இல்லாமல் ஆசிய நாணயத்தை உருவாக்குவதில் அமெரிக்கா ஈடுபடும் என்று எனக்கு மிகவும் வலுவான உணர்வு உள்ளது.

இந்த ஆசிய நாணயம் சார்க் கூட்டமைப்பு உருவாக்கும் போது சிந்திக்கப்பட்டது. எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நாடுகளின் டாலர் பெக்டர நாணயம், ஆசிய நாணயத்திற்கு நண்பனாக மாறக்கூடும் என்று நினைத்ததால் அமெரிக்காவால் அத்திட்டம் முடக்கப்பட்டது, ஏனெனில் அவர்களின் எண்ணெய் வணிகம் ஆசியாவை மையமாகக் கொண்டுள்ளது.

நாம் தற்போது கைகட்டி இந்த விளையாட்டை வேடிக்கை மட்டும் பார்ப்போம்!

இதன் காரணமாக இந்த கரோனா பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் பிஎஸ்இ நேற்று 1000 புள்ளிகள் அதிகரித்ததில் ஆச்சரியமில்லை! அமெரிக்க டாலருக்கான மாற்று நாணயத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு உந்துதல் எப்போதுமே டாலர் பெக் இல்லாத மற்ற நாடுகளுக்கு உள்ளது.

சீனாவின் இந்த புதிய முயற்சி எவ்வாறு செயல்படும் என்பதை நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும் …. எனக்கென்னமோ இதையே சீனா க்ரிப்டோ கரன்சியாக மாற்றி இருந்தால் உலக பொருளாதாரத்தை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது!

ஆனால் இதுவரை யாரும் டாலர்களுக்கு எதிராக வெல்லவில்லை! அது என்ன மாயம் என்று மட்டும் புரியவில்லை!

டிமிட்த் பெட்கோவ்ஸ்கி!