இன்னும் மூன்று வருடத்தில் ஒயின் மார்க்கெட்டில் சீனா இரண்டாமிடம் பிடிக்கும்!

இன்னும் மூன்று வருடத்தில் ஒயின் மார்க்கெட்டில் சீனா இரண்டாமிடம் பிடிக்கும்!

ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள்ளது. பெருநகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்களும் தற்போது ஒயின் அருந்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், தோல் மென்மையாக மாறும், மற்றும் உடலுக்கு நல்லது என்று கூறி பல நபர்கள் ஒயின் அருந்துவதை நாம் பார்த்திருப்போம். பொதுவாக மென்மது (பீர்) ஆனது 4 முதல் 5 சதவிகித ஆல்கஹாலை கொண்டிருக்கும். இந்தியாவில் தயாராகும் ஒயின்கள் பொதுவாக 0.5 சதவிகிதத்திற்கும் குறைவான (<0.5%) ஆல்கஹால் இருப்பதால் குடிப்பவர்களுக்கு போதை ஏறுவதில்லை. ஆனாலும் சில வகை ஒயின்களில் 15 சதவிகித்திற்கும் அதிகமாக ஆல்கஹால் உள்ளது. இத்தகைய ஒயின்கள் அதிக போதையை தரவல்லது. தற்போது ஒயின் உற்பத்தியில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா முறையே முதல் நான்கு இடங்களை பிடித்திருந்தது.

china mar 2

இந்நிலையில் சீனாவில் ஒயின் அருந்துவோர் மற்றும் பிற நாடுகளுக்கு ஒயின் ஏற்றுமதி செய்வோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு சீனாவில் உள்நாட்டு, வெளிநாட்டு ஒயின் விற்பனை 21 பில்லியன் டாலர்களைக் கடந்து சென்று கொண்டிருப்பதால் கூடிய விரைவில் உலக ஒயின் சந்தையில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பதோடு உற்பத்தி மற்றும் விற்பனையிலும் சீனா பிரிட்டன் மற்றும் ஃப்ரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை வெகு எளிதில் கைப்பற்றவும் வாய்ப்பிருப்பதாக வின் எக்ஸ்போ எனும் ஒயின் தொழிற்சாலை கண்காட்சியொன்று தனது கண்காட்சியின் இறுதியில் தெரிவித்தது.

சீனா உலகச் சந்தையில் இரண்டாம் இடத்தை அடைய வேண்டுமானால் அது இனி வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 39.8% வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். என வின் எக்ஸ்போ நிறுவனத்தின் செயல் இயக்குனர் குல்லாமா டெக்லிஸ் தெரிவித்துள்ளார்.

உலக ஒயின் சந்தையில் தொடர்ந்து தனது முதலிடத்தை தக்க வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? அது அமெரிக்கா என்று நீங்கள் சொன்னால் பதில் சரியானதே. கடந்த வருடத்தை விட 11.9 % அதிகமான வளர்ச்சி விகிதத்துடன் தொடர்ந்து உலக ஒயின் சந்தைப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது அமெரிக்கா எனபது குறிப்பிடத்தக்கது!

Related Posts

error: Content is protected !!