March 27, 2023

உலகின் மிக நீண்ட கடல் பாலம் திறஞ்சாச்சு! – வீடியோ

நீண்ட காலமாக தள்ளிப் போய் கொண்டிருந்த சீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்கும் 56 கிலோ மீட்டர் நீளமுள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம் இன்று திறக்கப்பட்டது. இந்த பாலத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் திறந்து வைத்தார்.

சீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்கும் வகையில் தென்சீனக்கடலில் 55 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது. இது 20 பில்லியன் டாலர் (சுமார் 1.40 லட்சம் கோடி) செலவில் அமைக்கப் பட்டது. இந்த பாலப்பணிகள் 2016-ம் ஆண்டிலேயே முடிக்கப்பட்ட நிலையில், அதன் திறப்பு விழா தொடர்ந்து தள்ளிப்போனது. நீண்ட நாள் தாமதத்துக்குப்பின் அந்த பாலம் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. இதற்காக ஸுஹாய் நகரில் நடைபெறும் விழாவில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ஹாங்காங், மெக்காவ் பகுதிகளை சேர்ந்த அதிபர்கள் மற்றும் 700க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

கடந்த 2009ம் ஆண்டு இந்த பாலம் கட்டும் பணிகள் துவங்கின. கடந்த 9 ஆண்டுகளாக நடந்த கட்டு மானப் பணிகள் சில வருடங்கள் தாமதத்திற்கு பின் முடிவடைந்து இன்று பொது மக்கள் பயன் பாட்டிற்காக திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாலத்தில் நாளை (புதன் கிழமை) முதல் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இப்பாலம் திறக்கப்படுவதன் மூலம் சீனா – ஹாங்காங் இடையேயான பயண நேரம் 3 மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறையும்.

இந்த பாலம் தென்சீனக்கடலில் சுமார் 56,500 சதுர கி.மீ. பகுதியையும், அதை சூழ்ந்துள்ள 11 நகரங் களையும் உள்ளடக்கி இருக்கிறது. சுரங்கப் பாதையின் இருபுறமும் செயற்கைத் தீவுகளை சீனா நாட்டு அரசாங்கம் உருவாக்கியுள்ளது 8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் வந்தாலும், மணிக்கு 340 கிலோ மீட்டர் வேகத்தில் புரட்டிப்போடும் புயல் காற்று வீசினாலும், இதை 120 வருடங் களுக்கு அசைக்க முடியாது என பொறியிலாளர்கள் கூறியுள்ளனர். பாலத்தை பயன்படுத்தி பேருந்தில் செல்ல இந்திய மதிப்பில் ஒருவருக்கு 700 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.