September 20, 2021

கலையரசன் நடித்த ‘சைனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா !

கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் ’சைனா’ திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான ஹர்ஷவர்தன் ”சைனா “ படத்தை இயக்கியுள்ளார். இவர் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் ஜெ.ஜி.விஜயம் என்பவரின் பேரன் ஆவார். கதாநாயகனாக கலையரசனும், கதாநாயகியாக ரிது வர்மாவும் நடித்துள்ளனர்.

சென்னை பர்மா பஜாரில் சிறிய கடை வைத்திருக்கும் கலையரசனின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவத்தால்,அவர் சந்திக்கும் பிரச்சனைகள்தான் இந்த படத்தின் கதைக்கருவாகும். இந்த படத்திற்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘மதுபானக்கடை’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த வேத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

கேங்ஸ்டர் மற்றும் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் FM இல் (SURYAN FM ) நடைபெற்றது.

ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.