December 2, 2021

30,000 உலக வரைபடங்களை அழித்த சீனா!

அட்லஸ் எனப்படும் உலக வரைபடத்தை வரைந்தவர் யார்?எனக் கேட்டால் சிலர் சட்டென்று கொலம்பஸ் என்பார்கள்  இல்லையில்ல மெர்கட்டர்  என்போர் சிலர், ஆனாலும் 6ம் நூற்றாண்டை சேர்ந்த இமோகோ முன்டி Imago Mundi என்பவர் கல்லில் அல்லது களிமண்ணில் உலக வரைபடத்தை வரைந்தார் எனவும் கூறப்படுகின்றது. ஆனாலும் வரைபடங்கள் தொடர்பில் திட்ட வட்டமாக இது வரை கூறப் பட வில்லை. அதே சமயம் உலக அவரைப்படத்தில் துல்லியமான கணக்கீடுகள் கொண்டது எதுவும் கிடையாது என்று பலரும் சொல்லி வரும் நிலையில்  அருணாச் சல பிரதேசம் மற்றும் தைவான் ஆகிய பகுதிகளை சீன பகுதியில் குறிப்பிடாத 30,000 உலக வரைபடங்களை சீனாவின் சுங்க அதிகாரிகள் அழித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தென் திபத்திய பகுதிக்கு சொந்தமானது என சீனா கூறி வருகிறது, 3,488 கி.மீ நீளம் கொண்ட அருணாச்சல பிரதேசம் சீனா இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு(LAC) வரையிலான எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்தியாவும் சீனாவும் இதுவரை 21 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீனா  சார்பில் வெளியிடப்படும் உலக வரைபடங்கள் பலவற்றில் அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதி சீனாவின் பகுதியாக குறிப்பிடப்படுவது வழக்கம். அந்த வகையில், சீனா விலிருந்து பெயர் குறிப்பிடப்படாத வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இருந்த 30,000 உலக வரைபடத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த உலக வரைபடத்தில், தைவான் தனி நாடாகவும், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பகுதியாகவும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அழிக்கப்பட்ட  அந்ஹ உலக வரைபடங்கள் ஒரு குறிப்பிடப்படாத நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்தவை என அரசு நடத்தும் பத்திரிகை நிறுவனம் அறிவித்தது.

இதுகுறித்து தெரிவித்த சீனா வெளியுறவுத்துறை பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டங்க ளுக்கானத் துறைத் தலைவர் பேராசிரியர் லியூ வென்சாங், ‘உலக வரைபடங்களை அழித்த விவகாரத்தில் சீனா செய்தது சரியான ஒன்று மற்றும் தேவையான ஒன்று. ஒரு நாட்டுக்கு இறையான்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் தான் முக்கியமான ஒன்று. சர்வதேச சட்டத்தின்படி தைவான் மற்றும் தெற்கு திபேத் ஆகிய பகுதிகள் சீனாவின் பகுதி’ என்று தெரிவித்துள்ளார்.

அடிசினல் ரிப்போர்ட்:

உலக வரைபடங்கள் பண்டைய காலங்களில் வரையப்பட்டதில் பல்வேறு நிலைபாடுகள் காணப்பட்டன. மனித நாகரிகம் தோன்றிய பொழுது உலகம் ஆப்ரிகா, பாரசீகம், பாபிலோனியா சுற்றிய பகுதி தான் உலகம் என நினைத்துக்கொண்டிருந்தனர் உலகின் முதல் வரைபடமும் அப்படி தான் வரையப்பட்டுள்ளது   பின்பு உலகம் தட்டையானது என்ற நினைத்தனர். பின்பு உலகம் உருண்டை என பின்னால் வந்த அறிவியலாளர்கள் கூறினார். இருப்பினும் ஆதி காலத்திலேயே பூமி உருண்டையானது போன்ற வரைபடம் துல்லியமாக வரையப்பட்டுள்ளது. எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் பூமிக்கு உயர சென்று பார்க்காமல் எப்படி வரைந்திருக்க முடியும்? மேலே இருந்து வந்த வேற்று கிரக வாசிகள் தான் உதவியிருக்கவேண்டும் மேலும் பிரமிட்களை கட்டியிருக்கவேண்டும் என்பதற்கு பலமான சான்றுகள் உள்ளன எனினும் நிரூபிக்க முடியவில்லை