குழந்தைகள் 3 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று கல்வி கற்க கூடாது!

குழந்தைகள் 3 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று கல்வி கற்க கூடாது!

கேரள மாநிலம் பரப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த ஒரு தொடக்கப்பள்ளி 2015ம் ஆண்டில் அரசு ஒப்புதலுடன் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து மற்றொரு பள்ளி சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், பள்ளி தரம் உயர்த்தப்பட்டதில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே தரம் உயர்த்த அரசு வழங்கிய ஒப்புதலை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த உத்தரவால் அந்தப் பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்ற மாணவ-மாணவிகள் மேல்படிப்புக்காக 34 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அந்தப் பள்ளி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் பி.லோகூர், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் தெரிவித்ததாவது:
10 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் கல்விக்காக 3 அல்லது அதற்கு மேற்பட்ட தூரம் நடந்து செல்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. 14 வயது வரை கல்வி கற்பது அடிப்படை உரிமை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இது உண்மையாக வேண்டும் எனில் தேவைப்படும் அளவுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் நீதிபதிகள் தடை விதித்தனர்.

Related Posts

error: Content is protected !!