ஒலிம்பிக் கிராமத்தில் பாலியல் தொழில் செய்யும் சிறுமிகள்!

ஒலிம்பிக் கிராமத்தில் பாலியல் தொழில் செய்யும் சிறுமிகள்!

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கட்டமைக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமம் போன ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. 31 கட்டடங்கள் கொண்ட இந்த வளாகத்தில், டென்னிஸ் மற்றும் கால்பந்து மைதானங்கள், நீச்சல் குளங்கள், 3 கால்பந்து மைதானங்கள் அளவிலான சமையல் மற்றும் உணவு பரிமாறும் அறை, சைக்கிள்களுக்கான பிரத்யேக பாதைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான புல்வெளிகள் என பல்வேறு வசதிகளும், கண்ணைக் கவரும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

rio jy 30

அத்துடன், இந்த வளாகத்தில் 10,160 அறைகள், 18,000 படுக்கைகள், துணி துவைப்பதற்கான 7 லான்டரிகள், கிளீனிக்குகள், பெரிய உடற்பயிற்சி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10,500 வீரர்கள், 7,000 பணியாளர்கள் குடியேற உள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியா, டென்மார்க், கனடா, பிரிட்டன், போர்ச்சுகல், ஃபின்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் குடியேறியுள்ளனர்.

அதே நேரத்தில் இந்த இடத்தில் இருந்து 50 கி.மீட்டர் தூரம் பயணம் செய்தால் வறுமை காரணமாக 9 வயது சிறுமிகளும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் சோகம் நடந்து வருகிறது. இவர்கள் எல்லாம் தங்களது வறுமையைப் போக்க பாலியல் வியாபாரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். குடும்பத்தினரே தங்களது வீட்டுப் பெண் குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளி வருகின்றனர். இங்கு அதிகமாக வந்து செல்பவர்கள் கனரக வாகன ஓட்டுனர்கள்தான். இந்த ஒலிம்பிக் கிராமத்தில் நடக்கும் விளையாட்டுகளில் மொத்தம் 10,000 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஒலிம்பிக் விளையாட்டிற்கு என 10 பில்லியன் டாலர் செலவிடப்படுகிறது.

ஆனால், இங்கு சிறு பெண் குழந்தைகளும் வறுமையால் தங்களது உடலை விற்கும் நிலையை உலகிற்கு அங்கிருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவங்கள் உணர்த்தி வருகின்றன. இது மட்டுமின்றி போதைப் பொருட்களும் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது.இது மட்டுமின்றி பாலியல் தொழிலுக்காக இங்கிருந்து சிறுமிகள் கடத்தப்பட்டு வருகின்றனர். சிலர் தங்களது குழந்தைகளை பணத்திற்காக ஆசைப்பட்டு முதியவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து வருகின்றனர்.

மேலும் இந்த சிறுமிகளை ஆபாசப் படங்களை பார்க்க வைத்து கொடுமை செய்வதால் இந்த அவமானங்களையும், கொடுமைகளையும் தாங்க முடியாமல் பல குழந்தைகள் தங்களது வாழ்க்கையையும் முடித்துக் கொண்டுள்ளனர்.பிரேசிலில் உள்ள கேண்டிடோ நகரில் சிறு குழந்தைகளும் பாலியல் தொழிலுக்கு ஏலம் விடப்பட்டு வந்தனர். இது தற்போது கடுமையான எதிர்ப்புக்கு பின்னர் நிறுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அங்கு இருந்த முக்கிய விபச்சார தரகர்களை கைது செய்து உள்ளனர். பர்ரா டா டிஜுகா உள்ள பென்ட்ஹவுஸ், பகுதியில் பிரபல 3 விபசார புரோக்கர்கள் சொகுசு பிளாட்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்து உள்ளனர்.24 மணி நேரம் நடைபெற்ற இந்த் விபசார தொழில் குழந்தை விபசார தொழிலும் நடைபெற்று வந்து உள்ளது.

error: Content is protected !!