Categories: தமிழகம்

எடப்பாடி பழனிசாமி சேலத்தில் திறந்து வைத்த ஈரடுக்கு மேம்பாலம்!- வீடியோ

சேலம் குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. குரங்குச்சாவடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மேம்பாலத்தை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

சேலம் மாநகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 5 ரோட்டை மையமாக கொண்டு புதிதாக ஈரடுக்கு மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. அதன்படி சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையிலும், குரங்குச்சாவடியில் இருந்து 5 ரோடு, புதிய பஸ் நிலையம் வழியாக 4 ரோடு அண்ணா பூங்கா வரையிலும் ரூ.441 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட ஈரடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டுவதற்கு முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 14.1.2016 அன்று அடிக்கல் நாட்டினார். இந்த மேம்பாலத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக குரங்குச்சாவடி முதல் புதிய பஸ் நிலையம் வழியாக 4 ரோடு அண்ணா பூங்கா வரையில் 5 கிலோ மீட்டர் தூரம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளன. இந்த மேம்பாலமானது 4 வழிப்பாலமாக அமைந்துள்ளது.

இந்தநிலையில், குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி இன்று (11–ந் தேதி), முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது  பழனிச்சாமி கூறியதன் சாரம்சம் இதுதான் :

புரட்சித்தலைவி அம்மா அருளாசியோடு இன்றையதினம் சேலம் மாநகர மக்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றும் விதமாக ஐந்து ரோடு ஈரடுக்கு மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் 2012–ம் ஆண்டு நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் சேலம் மாநகர மக்கள் நகரத்திற்குள் செல்கின்ற சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகின்ற காரணத்தால் சாலை சந்திப்பில் உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டும், ரெயில்வே கடவுகளின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள்.

அதனடிப்படையில், 2012–ம் ஆண்டு சேலம் மாநகர மக்கள் வைத்த கோரிக்கையை அப்படியே புரட்சித்தலைவி அம்மாவிடத்தில் அளித்தேன். அதிலொன்று இன்றையதினம் திறக்கப்பட்டுள்ள ஐந்து ரோடு ஈரடுக்கு மேம்பாலம், அதோடு, ஏ.வி.ஆர் ரவுண்டானா மேம்பாலம், திருவாக் கவுண்டனூர் ரவுண்டானா உயர்மட்டப்பாலம், முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே கடவுகளின் குறுக்கே இரண்டு உயர்மட்டப் பாலம், மணல்மேடு பகுதியில் ரெயில்வே கடவின் குறுக்கே உயர்மட்டப் பாலம், செவ்வாய்ப்பேட்டை உயர்மட்ட மேம்பாலம் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன.

புரட்சித் தலைவி அம்மா அருளாசியோடு, அம்மா மண்ணிலிருந்து மறைந்தாலும் அவர் அறிவித்த திட்டங்கள் நமது கண் முன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அவருடைய அறிவிப்பால் உருவாக்கப்பட்ட இந்த ஐந்து ரோடு ஈரடுக்கு மேம்பாலத்தை இன்றையதினம் திறந்து வைத்ததில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

அம்மாவின் நினைவாக, போற்றும்விதமாக, இந்த ஈரடுக்கு மேம்பாலத்திற்கு ‘‘புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா இரண்டடுக்கு மேம்பாலம்” என அம்மா பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல, முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரைப் போற்றும்விதமாக குரங்குசாவடி முதல் ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையிலான உயர்மட்டப் பாலத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்றையதினம் பல்வேறு பாலங்கள் வேண்டுமென்று சேலம் மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்.” என்றார்

aanthai

Recent Posts

அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘ரத்தம்’ பட டீசர்!

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' பட டீசர் பார்வையாளர்களிடையே, படம் குறித்த எதிர்பார்ப்புகளைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நடிகர்…

6 hours ago

சங்கராந்தியன்று இரட்டைப் பரிசு வழங்கும் ஸ்ருதிஹாசன்!

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின்…

11 hours ago

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை சுரேஷ் காமாட்சி ரிலீஸ் செய்கிறார்!

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம்…

12 hours ago

நல்ல கலை இயக்கம் என்பது வெளியே தெரியாமல் இருப்பதுதான்: கலை இயக்குநர் வீரசமர்!

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் 'காதல்' திரைப்படத்திலிருந்து சுமார் 30 படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வீரசமர் .இவர் 'வெயில்', 'பூ',…

12 hours ago

கனெக்ட் படத்தில் என்ன ஸ்பெஷல்? – டைரக்டர் அஸ்வின் சரவணன் பகிர்ந்தவை!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்…

1 day ago

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து வெளியேற திட்டம்?

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள்…

2 days ago

This website uses cookies.