சிவ ஜெயந்தி @ சிவாஜி ஜெயந்தி!

சிவ ஜெயந்தி @ சிவாஜி ஜெயந்தி!

மராட்டிய சக்ரவர்த்தி சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்தநாள் இன்று மஹாராஷ்டிராவில் சிறப்பாக கொண்டாடப்படுது. இன்றைய தினம் சிவ ஜெயந்தி என்றும் சிவாஜி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுது.

1630 பிப்ரவரி 19 ல் முகலாயர் ஆட்சி காலத்தில் புணே மாவட்டம் ஷிவ்ரேனி மலைக்கோட்டை யில் ஷாஹாஜி போன்ஸ்லே, ஜீஜாபாயி தம்பதிகளுக்கு சிவாஜி பிறந்தார். 1674 ஜூன்6ல் அரியணை ஏறினார். தாயிடம் மிக அன்பாக இருந்த சிவாஜி பக்தியோடு ராமாயண மகாபாரதங்களை படித்தறிந்தார். 1680 ஏப்ரல் 3 அன்று 52வது வயதில் இயற்கை எய்தினார் .

சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி, நிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும், ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வரிவசூல் நடவடிக்கைக் காக பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அதன் அடிப்படையில் மன்னனுக்கு ஆலோசனை கூற எட்டு அமைச்சர் கொண்ட “அஷ்டபிரதான்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். பிறகு அரசை மூன்று மாகாணங்களாக பிரித்து, ஒவ்வொரு மாகாணமும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டது. இராணுவப் படை, குதிரைப்படை, கடற்படை என அனைத்திலும் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு, மன்னரின் நேரடி கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று சிறப்புமிக்க பல கோட்டைகளையும் கட்டினார். குறிப்பாக சொல்லப்போனால், சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரா அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது என கூறலாம்.

அப்பேர்பட்ட சிவாஜி பிறந்தநாளை சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா பூலே முதன் முதலில் கொண்டாடத் தொடங்கினர். அப்போது முதல் சிவாஜி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

இருமுறை பாபாசாகேப் அம்பேத்கர் சிவாஜி ஜெயந்தி உற்சவங்களுக்கு தலைமை வகித்துள்ளார். சிவாஜி பிறந்த நாளன்று மகாராஷ்டிராவின் அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களிலும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.

இது மராட்டிய மக்களின் பெருமைமிக்க தினமாக கருதப்படுகிறது. மகாராஷ்டிரா மட்டுமின்றி சிவாஜி ஜெயந்தி கோவா, கர்நாடகாவிலும் கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

சிவாஜியின் சீரிய கருத்துக்களை சமுதாயத்தில் ஒவ்வொரும் கடைப்பிடிக்கும்படி செய்வதில் சிவாஜி ஜெயந்தி கொண்டாட்டங்கள் வெற்றி பெறுகின்றன.

error: Content is protected !!