சென்னை சேப்பாக்கம் கிரவுண்ட்டுக்கு மவுசு கூடப் போகுதுங்கோ!

சென்னை சேப்பாக்கம் கிரவுண்ட்டுக்கு மவுசு கூடப் போகுதுங்கோ!

ந்தியாவின் பழைமை வாய்ந்த மைதானங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானம் . 1916ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் என்று அழைக்கப்பட்ட மைதானம் பின்னர் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் என்று மாற்றப்பட்டது. இந்த மைதானத்தில் முதல் தர கிரிக்கெட் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மைதானத்துக்கு என்று தனிச் சிறப்புகளும் உண்டு. இந்நிலையில் ரூ.139 கோடியில் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தலுக்கு தமிழ்நாடு அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் 62 ஆயிரம் சதுர அடியிலிருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவடைய உள்ளது. இந்த கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் உலசின் சிறந்த மைதானமாக தயாராக உள்ளது. சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் மற்றும் விரிவான திட்ட அறிக்கையுடன் புதுப்பித்தலுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் மாணவர்களின் திறனை மேம்படுத்த ரூ.20 லட்சம், அடையாறு ஆறு தூய்மைப்படுத்த ரூ.25 லட்சம், பக்கிங்காம் கால்வாயை தூர்வாற, தூய்மைப்படுத்த ரூ.25 லட்சமும் சேப்பாக்கம் மைதானம் சார்பில் வழங்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல. உலகளவிலான ரசிகர்கள் அனைவருக்குமே செல்லமான ஸ்டேடியம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் பலருமே சென்னையில் ஆடுவதை பெருமையாகவும், கவுரவமாகவும் கருதினார்கள். ஏனெனில், சொந்த அணியை மட்டுமின்றி எதிரணியின் சாதனைகளையும் அங்கீகரித்து ஊக்குவிக்கும் ரசிகர்கள் சென்னை ரசிகர்கள். பொதுவாகவே பேட்டிங்குக்கு சாதகமான மைதானம் என்று அறியப்பட்டாலும், பவுலர்களும் கூட இங்கே முத்திரை பதிக்கத் தவறியதில்லை. பொதுவாகவே டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் வழவழ கொழகொழவென டிராவை நோக்கி நகர்வது வழக்கம். ஆனால், சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகள், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைப் போல திரில்லிங்காக வெற்றி அல்லது தோல்வி என்கிற நிலையை நோக்கி நகரும். அப்படியோர் ரசிகர்கள் கூடும்
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் புதுப்பிக்கப்பட்டாலும் 18 நிபந்தனைகளுடன்தான் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றில் முக்கியமானவை,

நிபந்தனை 1 – மைதானத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை எடுத்துச்செல்லும் முறை மற்றும் அதற்கான திட்டத்தை முறைப்படி தயார் செய்ய வேண்டும் .

நிபந்தனை 2 – நீர்நிலை மற்றும் நீரோட்டம், சார்ந்த இடங்களில் விரிவாக்கப்பணிகள் நடைபெறாது என உறுதியளிக்க வேண்டும் . நிபந்தனை 3 – மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்படவில்லை. ஒருவேளை மரங்களை வேரோடு பிடுங்கினால் அதனை மாற்று இடத்தில் நட வேண்டும் .

நிபந்தனை 4 – புதிய கட்டுமானத்தால் அருகில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . நிபந்தனை 5 – பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

நிபந்தனை 6- பார்வையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போதுமான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும் . நிபந்தனை 7 – குடிநீர், கழிவுநீர், கால்வாய்கள் மற்றும் மழைநீர்வடிகால் ஆகியவற்றிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் .

நிபந்தனை 8 – பார்வையாளர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் . நிபந்தனை 9 – போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றிற்கு இடமளிக்காத வகையில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 18 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!