சென்னை ; சுரங்க மெட்ரோ ரயில் போக்குவரத்து வருகிற 14-ந்தேதி முதல் தொடக்கம்!

சென்னை ; சுரங்க மெட்ரோ ரயில் போக்குவரத்து வருகிற 14-ந்தேதி முதல் தொடக்கம்!

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் மக்களின் விரைவு பயணத்துக்காகவும் 14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல்- ஆலந்தூர் வரையிலும் அதை தொடர்ந்து சின்னமலை விமான நிலையம் வரையிலும் உயர்மட்ட பாதையில் மெட்ரோ போக்குவரத்து தொடங்கப்பட்டது.

2-வது கட்டமாக பூமிக்கடியில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையில் சுரங்க ரயில் போக்குவரத்துக்காக சுரங்க பாதை அமைக்கப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையொட்டி சோதனை ரயில் ஓட்டம் நடந்தது. மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து அனுமதி சான்றிதழ் அளித்தார். இதை தொடர்ந்து பயணிகள் போக்குவரத்துக்காக வருகிற 14-ந்தேதி முதல் சுரங்க மெட்ரோ ரெயில் ஓடும் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

metro may 7

மெட்ரோ சுரங்க ரயில் விரைவில் ஓட உள்ளதையொட்டி அண்ணாநகர், அமிஞ்சிகரை, கீழ்ப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். பூமிக்கடியில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என தெரிவித்தனர்.

இதனிடையே திருமங்கலம், அண்ணா நகர், செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, நேரு பூங்கா உள்பட அனைத்து ரயில் நிலையங்களில் நுழைவு பாதை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பயணிகளுக்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக எல்லா ரயில் நிலையங்களிலும் நுழைவு பாதை, வெளியே செல்லும் பாதைகள் என 2 பாதைகள் விரைவாக அமைக்கப்பட்டு வருகிறது. ரெயில் நிலையங்கள் அனைத்திலும் குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்கள், கழிப்பிட வசதிகள், குடி தண்ணீர் வசதிகள் என அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!