சென்னையில் பெண்கள் நடத்தும் நடமாடும் டீக்கடை..!- வீடியோ!

சென்னையில் பெண்கள் நடத்தும் நடமாடும் டீக்கடை..!- வீடியோ!

நம்ம சிங்காரச் சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் டீ கடையை (எலக்ட்ரிக் ரெட்ரோஃபிட் ஆட்டோ ரிக்‌ஷா) கில்லி சாய், மாட்டோ எலக்ட்ரிக் மொபி லிட்டியுடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தனித்துவமான டீ கடை முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, சமூக பொறுப்புள்ள ஒரு தொழிலை நடத்துவதற்கான நம்பிக்கையையும் அவர்களுக்கு வழங்கும்.

மாறி வரும் இந்த சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். அந்த வரிசையில், பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையில், நடமாடும் டீக்கடையை இரண்டு நிறுவனங்கள் இணைந்து சென்னையில் தொடங்கியுள்ளன. சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ மூலம், டீ மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை ஒட்டி நடைபெற்ற தொடக்க விழாவில் திரைப்பட நடிகர் நாசர், இயக்குநர் வசந்த், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கிவைத்தனர். சென்னையில் தற்போது 6 ஆட்டோக்கள் சேவையைத் தொடங்கியுள்ளன.

இதில், ஆட்டோ ஓட்டுவது, விற்பனை செய்வது என அனைத்துப் பணிகளிலும் பெண்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். கோடம் பாக்கம், பெரம்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் தற்போது இந்த ஆட்டோ டீக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. டீ, காபி, வடை, பஜ்ஜி என 15-க்கும் மேற்பட்ட தின்பண்டங்கள் கிடைக்கின்றன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் நாசர், “ இன்று முதல் சென்னைவாசிகளுக்கு புதிய ருசியோடு கில்லி சாய் வழங்கப் போகிறது.இதில் மகிழ்ச்சியான ஒரு விஷயம் பெண்களாகவே ஆட்டோ ஓட்டி வந்து ஒவ்வொரு பகுதிக்கும் ஆட்டோவில் ன்று டீயை வழங்க இருக்கிறார்கள்..

பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைக்கும் நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும், மேலும் சென்னை மாநகர பெருநகர் அதிகமாக மாசுபட்டு இருக்கிறது, அதனை தடுக்கும் விதமாக M ஆட்டோவை அறிமுகப்படுத்தியவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துக் கொண்டார்..!

error: Content is protected !!