சென்னை மாவட்ட நிலத்தடி நீர் மட்டம் எம்புட்டுன்னு எப்போ தெரியும்?

சென்னை  மாவட்ட நிலத்தடி நீர் மட்டம் எம்புட்டுன்னு எப்போ தெரியும்?

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 3,280 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,559 ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் நீர் அளவு மொத்தமாக ஒவ்வொரு மாதமும் நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்படுகிறது.

water sep 16

அதன்படி, கடந்த மாதத்தில் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2015 ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், நீலகரி, தேனி, தூத்துக்குடி திருநெல்ேவலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

ஆனால், கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்ைட, அரியலூர், கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்ைக உள்பட 12 மாவட்டங்களில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை மாவட்ட நிலத்தடி நீர் மட்டம் விவரங்களை வெளியிட பொதுப்பணித்துறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை குடிநீர்வாரியம் கோரிக்கை வைத்தது. இதை தொடர்ந்து சென்னை மாவட்ட நிலத்தடி நீர் மட்டம் தொடர்பான விவரங்களை வெளியிட பொதுப்பணித்துறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் விவரம் வெளியிடாமல் மறைக்கப்பட்டுள்ளது. –

error: Content is protected !!