பொது இடங்களில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி!

பொது இடங்களில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி!

சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5400 மெட்ரிக்டன் திடக்கழிவுகள் அகற்றப்படுகிறது. அப்படி அகற்றப்பட்ட அடுத்த ஐந்து நிமிடங்களில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. இந்த சட்டத்தை அடுத்த 3 மாதங்களில் அமல்படுத்தப்படும் என்றும், தமிழகம் முழுவதும் இந்த சட்டத்தை விரிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின் முன்னெடுப்பால் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் கண்டயிடங்களில் அசுத்தம் செய்வது, குப்பையை கொட்டுவது, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது மற்றும் வாகன புகைகள், போன்ற செயல்களால், பல தொற்று நோய்கள் மக்களிடம் பரவி வருகிறது. பின்னர் ஆங்காகே பயன்படுத்தும் பொருட்களை அப்படியே இருக்கும் இடத்திலேயே போட்டுவிட்டு செல்வது, இதனால், தெருவுக்கு ஒரு குப்பைத்தொட்டி இருந்தாலும் கூட அதனை சரியாக பயன்படுத்து வதில்லை. இதுபோன்ற நடைமுறைகளால் காற்று மாசுபட்டு சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசாணையில், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனி தனியே கட்டண முறையை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் குப்பையை கொட்டுவது, எச்சில் துப்புவது, குப்பையை எரித்தல், போன்றவைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அடுத்த 3 மாதங்களில் அமல்படுத்தப்படும் என்றும், தமிழகம் முழுவதும் இந்த சட்டத்தை விரிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!