பால்டிக் கடலுக்கு அடியில் ரசாயன ஆயுதங்கள்!- பேரழிவுக்கு வழி!

பால்டிக் கடலுக்கு அடியில் ரசாயன ஆயுதங்கள்!- பேரழிவுக்கு வழி!

பால்டிக் கடற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்களால், இயற்கைக்கு பேரழிவு ஏற்படும் என்றும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்டிக் கடல் என்பது, மத்தியதரைக் கடலைச் சார்ந்த ஒரு கடல் ஆகும். இது மத்திய ஐரோப்பாவுக்கும், வட ஐரோப்பாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இசுக்கன்டினேவியத் தீவக்குறையின் சுவீடியப் பகுதி, ஐரோப்பியத் தலைநிலம், டேனியத் தீவுகள் என்பன இக்கடலின் எல்லைகளாக உள்ளன. இது கட்டெகாட் என்னும் கடற்பகுதி, இசுக்காகெராக் கடற்பகுதி வழியாக அத்திலாந்திக் பெருங்கடலில் கலக்கிறது.

பால்டிக் கடல் வெண்கடற் கால்வாய் என்னும் செயற்கை நீர்வழியூடாக வெண் கடலுடனும், கியெல் கால்வாய் எனப்படும் இன்னொரு செயற்கை நீர்வழியூடாக வட கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கில் போத்னியக் குடாவும், வடகிழக்குப் பகுதியில் பின்லாந்துக் குடாவும், கிழக்கில் ரீகா குடாவும் எல்லைகளாக இருக்கிறது.

இந்நிலையில், பால்டிக் கடலுக்கு அடியில் ரசாயன ஆயுதங்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தவிர்க்க முடியாத கடல் அரிப்பின் காரணமாக இந்த ரசாயன ஆயுதங்கள் சுற்று சூழல் மாற்றத்தை ஏற்படுத்தி ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இது தொடர்பாக, போலாந்தின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பால்டிக் கடற்பரப்பில் குவிக்கப்பட்டிருக்கும் கன்னி வெடிகள், பீப்பாய்கள் மற்றும் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களின் சரியான மதிப்பை கணக்கிடுவது கடினமாக உள்ளது. ஆனால், அங்குள்ள ரசாயன ஆயுதங்கள் 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டன் வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

2-ம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனியின் நாஜி படைகளால் கைவிடப்பட்ட ரசாயன ஆயுதங்கள் பால்டிக் கடற்பகுதியில் குவிந்து கிடப்பதாகவும், இவை இயற்கைக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்த தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ரசாயன ஆயுதங்கள் 70 மீட்டர் கடலுக்கு அடியில் தண்ணீரை மாசுப்படுத்துவதோடு, உயிரினங்களையும் அழித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!