‛ரிபப்ளிக் டிவி’ சிஇஓ விகாஸ் கன்சன்தானி டிஆர்பி முறைகேடு வழக்கில் கைது!

‛ரிபப்ளிக் டிவி’ சிஇஓ விகாஸ் கன்சன்தானி டிஆர்பி முறைகேடு வழக்கில் கைது!

பல்வேறு டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும் டி.ஆர்.பி.,யில் மோசடி வழக்கு தொடர்பாக ‛ரிபப்ளிக் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானியை மும்பை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 13 வது நபர் இவர் ஆவார்.முன்னதாக தங்கள் ஊழியர்களை கைது செய்யக் கூடாது என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ‘ரிபப்ளிக்’ டிவி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் விளம்பர நிறுவனங்களின் பார்வ்வைக்காக டி.ஆர்.பி. (டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் – TRP) எனப்படும் கணக்கிடும் பணியை BARC (Broadcast Audience Research Council) என்ற நிறுவனம் செய்துவருகிறது. இந்த நிறுவனத்துக்குக் கீழ் இயங்கி வரும் ஹன்சா ரிசர்ச் நிறுவனம், BARC நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா முழுவதும் 30,000 டி.ஆர்.பி மீட்டர்களை வைத்து டி.ஆர்.பி கணக்கிடும் பணியைச் செய்துவருகிறது.

ஆனால் அண்மையில் ல், டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளைப் பெறுவதற்காக தங்கள் சேனலை மட்டும் பார்க்க ஒரு வீட்டுக்கு மாதந்தோறும் ரூபாய் 400 முதல் 700 வரை அளித்து மோசடி செய்திருப்பதாக ஆங்கில செய்தி ஊடகமான ரிபப்ளிக் டி.வி, மராத்தி சேனல்களான `Fakt Marathi’, `பாக்ஸ் சினிமா’ உள்ளிட்ட சேனல்கள் மீது ஹன்சா ரிசர்ச் (Hansa Research) நிறுவன அதிகாரி நிதின் தியோகர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து மும்பை காவல்துறை, கடந்த அக்டோபர் 6-ம் தேதி டி.ஆர்.பி மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதில், தடயவியல் தணிக்கையாளர்கள், BARC கவுன்சில் உறுப்பினர்கள் உட்பட 140 நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வந்த நிலையில், டி.ஆர்.பி. முறைகேட்டில் ரிபப்ளிக் டிவி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கான்சன்தானியை (Vikas Khanchandani) மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், விகாஸ் 13-வது நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், டிஆர்பி முறைகேட்டில் 13வது குற்றவாளியாக கன்சந்தானியை கைது செய்துள்ளோம். நடந்த குற்றச் சம்பவங்கள் பற்றி விகாஸ் கன்சன்தானி நன்றாகவே அறிந்து வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!