தமிழகத்திற்கு ஓரிரு வாரத்தில் நிரந்தர கவர்னர்?

தமிழகத்திற்கு ஓரிரு வாரத்தில் நிரந்தர கவர்னர்?

தமிழக ஆளுநர் எனப்படும் கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, மகாராஷ்ட்ரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது. கடந்த எட்டு மாதங்களாக கூடுதல் பொறுப்பை அவர் கவனித்து வருகிறார். இதைத்தொடர்ந்து , தமிழகத்துக்கு முழுநேர ஆளுநரை நியமிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், தமிழகத்துக்கு புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

governor may 4

இதேபோன்று, ஆந்திரா, தெலுங்கானா மாநில கவர்னராக உள்ள நரசிம்மனின் பதவிக் காலம் நிறைவடைந்தும், அவரே அந்தப் பொறுப்பில் நீடிக்கிறார். குஜராத் மாநில கவர்னர் ஓம் பிரகாஷ் கோலியிடம், ம.பி., கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது. மேகாலயா மாநில கவர்னராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன், தன் பதவியை ராஜினாமாசெய்ததை அடுத்து, அந்த மாநில கவர்னர் பொறுப்பு, அசாம் கவர்னர் பன்வாரி லால் புரோஹித்திடம் கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.

அருணாச்சல பிரதேசத்திலும், முழு நேர கவர்னர் நியமனம் செய்யப்படவில்லை. நாகாலாந்து கவர்னர் பத்மநாப ஆச்சார்யா அந்த மாநிலத் தின் பொறுப்பை கூடுதலாக கவனிக்கிறார். இதையடுத்து, இந்த மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ஒருவரை கவர்னராக நியமிக்க இன்னும் ஓரிரு வாரத்தில் அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!